Cinema

விஷால்தான் Target... ரவீந்தர் Replacement-ஆக தகுதியானவர் - BB வீட்டில் இருந்து வெளியேறப்போவது யார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கி 94 நாட்களை கடந்து விட்டது. நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், போன வார இறுதியில் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர். மேலும் Ticket To Finale பெறுவதற்காக நடைபெற்ற டாஸ்கில் அதிரடியாக விளையாடிய ரயான் வெற்றி பெற்று direct finalist ஆக தேர்வாகி இருந்தார். விஜய் சேதுபதி வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களுடன் கலந்துரையாடி TTF வெற்றியாளரை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ரயான், முத்து, தீபக், ஜாக்குலின், பவித்ரா, சௌந்தர்யா, விஷால் மற்றும் அருண் ஆகியோர் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில் பயணித்து வருகின்றனர். இவர்களில் பண பேட்டி எடுப்பவர் யார்? டைட்டில் வெல்லப்போவது யார்? போன்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. இதனிடையே PR team வைத்துவிட்டு நிகழ்ச்சிக்குள் வந்திருக்கும் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற மார்னிங் ஆக்டிவிட்டி பிக்பாஸால் கொடுக்கப்பட்டது. இதில், சௌந்தர்யா PR team வைத்திருக்கலாம் என்று பலரும் கூறி இருந்தனர். இதையடுத்து, இந்த நிகழ்ச்சியின் கடைசி நாமினேஷன் பிராசஸ் நடக்கப்போவதாக போட்டியாளர்கள் அனைவரும் சபையில் கூட சொன்ன பிக்பாஸ், TTF வென்ற ரயானை தவிர்த்து அனைவரும் நாமினேஷனில் இடம்பெறுவதாக கூறினார்.

இதையடுத்து, ‘சுத்தி சுத்தி வந்தீக...’ என்ற இந்த வாரத்திற்கான ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில் 6000 points பெற்ற போட்டியாளர்கள், இந்த வாரத்திற்கு ஷாப்பிங் செய்தனர். போட்டி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. வீட்டிற்குள் ஆள் பற்றாக்குறையால் வீடு வெறிச்சோட தொடங்கியது. இதனால் போட்டியாளர்களுக்கு ட்விஸ்ட் கொடுக்க எண்ணிய பிக்பாஸ், வீட்டை விட்டு வெளியே சென்றவர்களில் 8 நபர்கள் மீண்டும் உள்ளே வர போவதாக அறிவித்தார்.

Wildcard Knockout ஆக வரப்போகும் நபர்கள் உள்ளே இருப்போரை replace செய்யவாய்ப்புள்ளது என்றும் எச்சரித்தார் பிக்பாஸ். இதில், முதலாவதாக வீட்ற்குள் வந்தது, வர்ஷினி மற்றும் சுனிதா. வந்தவுடனே போட்டியாளர்களிடம் அவரவர்களின் குறைகளை சொல்ல ஆரம்பித்தார் சுனிதா. இதில் "ஜாக்குலினுக்கு கூட எப்பவும் ஒரு ஆள் தேவைப்படுவதாக" கூறிய சுனிதா, "என்னடா Triangle டிரை பண்ணியா?" என்று விஷாலிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டார். இதுகுறித்து விஷால் மற்றும் சுனிதா இடையே ஒரு உரையாடல் நடைபெற்றது. இவர்களை தொடர்ந்து அடுத்ததாக ரவீந்தர் வீட்டின் உள்ளே வந்தார். ரவீந்தர் உள்ளே இருந்த போட்டியாளர்கள் பற்றி நல்லவிதமாக பேசியதுடன், இந்த சீசன்தான் பெஸ்ட் என புகழ்ந்து தள்ளினார்.

ரவீந்தரை தொடர்ந்து வீட்டிற்குள் வந்த ரியா, your game is over என்ற card -ஐ பவித்ரா, அருண், விஷால் ஆகியோரிடம் வழங்கினார். அடுத்ததாக வீட்டிற்குள் வந்தது தர்ஷா குப்தா மற்றும் அர்னவ். "என்னை மட்டம் தட்டி தட்டியே வெளிய அனுப்பிட்டீங்க" என்று கூறிய தர்ஷா, "அடுத்தவங்களை மட்டம் தட்டியே உங்க பொழப்ப ஓட்டுரிங்க" என்று முத்துவை தாக்கினார். அடுத்ததாக, "சீரியல்ல ஆக்ட் பண்ற மாதிரியே இங்கையும் நடிக்கிறீங்க" என பேச தொடங்கிய அர்னவ், "shirtless guy... எங்க அவன்....என்று சத்யாவையும்.. நோண்டிட்டும் தடவிட்டும், இருப்பானே ஜெப்ரி..” என்றும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை சுட்டிக்காட்டி பேசிய வார்த்தைகள் நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கும் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

மேலும், விஷாலிடம் open challenge செய்த அர்னவ், "என்னைப் பத்தி நிறைய பின்னாடி பேசினேலா, பிக் பாஸ் முடியற வரைக்கும் எதுவா இருந்தாலும் முன்னாடி பேசு" என்று சவால் விட்டார். மேலும் சவுந்தர்யா, அருண் மற்றும் விஷால் ஆகியோரை replace செய்யக்கூடிய போட்டியாளர்கள் என்றும் அர்னவ் கூறினார்.

இதையடுத்து, சிவகுமார் மற்றும் சாச்சனா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். இதில், ஜாக்குலின், சவுந்தர்யா, அருண் ஆகியோர் குழந்தைத்தனமாக செயல்படும் நபர்களாக கூறினார் சாச்சனா. இதில் வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களின் பலரும் விஷாலிடம், தர்ஷிகா மற்றும் அன்ஷிதாவுடனான நட்பு குறித்து பேசி இருந்தனர். அதே போல சாச்சனாவும் விஷாலிடம் பேசிய பொழுது, "என் அண்ணன் வெளில தப்பா தெரியக்கூடாது, நீ playboy மாதிரி தெரியுற" என்று கூறிய வார்த்தைகள் விஷாலை மிகவும் மனதளவில் கவலைக்குள்ளாக்கியது. இதனால் தர்ஷிகா, தர்ஷிகாவின் அம்மா மற்றும் அன்ஷிதாவிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார் விஷால்.

இதையடுத்து, Top 8 vs challenging 8 என போட்டியாளர்களை இரு அணிகளாக பிரித்தார் பிக்பாஸ். "ஆடிய ஆட்டம் என்ன?" என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு ஒரு ஒரு character வழங்கப்பட்டு, பாடல் ஒலிக்கும் போது dance ஆட வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது.

இதில் முதலாவதாக ஆட வந்தது, கில்லி திரிஷா வேடம் அணிந்திருந்த சௌந்தர்யா. அடுத்ததாக 'அடியே கொல்லுதே' என்ற வாரம் ஆயிரம் பட பாடலுக்கு ஆட வந்தது அருண். இவரைத்தொடர்ந்து, 'ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் பாடலுக்கு தன்னால் முடிந்த அளவு முழு முயற்சி செய்து ஆடினார் ரவீந்தர், ஒரு கட்டத்தில் ஆடமுடியாமல் அமர்ந்தாலும், பிக்பாஸின் பாராட்டை பெற்றுக்கொண்டார் ரவீந்தர். இதையடுத்து, விளையாடு மங்காத்தா பாடலுக்கு ஆட வந்தார் சிவகுமார், இவருடன் ரியாவும், தர்ஷாவும் இணைந்து ஆடினர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், மீண்டும் வந்துள்ள 8 பேரில் இருந்து இரண்டு பேரை choose செய்து யாரு replacement ஆக தகுதியானவர்கள் என்று கூற வேண்டும் என பிக்பாஸ் தரப்பில் அறிவிப்பு வந்துள்ளது. இதில் முத்து மற்றும் ரயான் ரவீந்தரை கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல, top 8 போட்டியாளர்களின் இருந்து இரண்டு நபரை choose செய்து யார் இந்த வீட்டில் replace செய்யப்பட வேண்டும் என்று கேட்கப்படுகிறது. இதற்கு அர்னவ், விஷால் மற்றும் அருணை கூறும் கட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த வாரம் mid-week eviction உள்ளது என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்து வெளியேற போகும் நபர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Also Read: BB 8 Freeze task: ஒரு பக்கம் emotional, மற்றொரு பக்கம் குடும்பத்தினர் advice; விசாரிக்கும் விஜய் சேதுபதி!