Cinema
அல்லு அர்ஜுன் விவகாரம்: “அவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்?” - அதிர்ந்த கர்நாடகா சட்டப்பேரவை - விவரம்?
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ‘புஷ்பா’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் சுமார் 3 ஆண்டு கடின உழைப்புக்கு பின்னர் கடந்த டிச.5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவான புஷ்பா 2 திரைப்படம், தற்போது வரை ரூ.1500 கோடிக்கு வசூலித்து வருகிறது. இந்த சூழலில் புஷ்பா 2 படத்தின் முதல் காட்சியின்போது, ஐதராபாத்திற்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனை காண கூட்டம் திரண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் சிக்கிய பெண் ரசிகர்கள் ஒருவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது மகனுக்கும் கடும் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ரூ.2 லட்சம் நிதி வழங்கினார்.
இந்த விவகாரத்துக்கு தொடர்ந்து கண்டனங்கள் எழுந்த நிலையில், கடந்த டிச.13-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கிடைத்து மறுநாள் (டிச.14) சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தெலுங்கு திரையை சேர்ந்த முக்கிய நடிகர்கள், சிறையில் இருந்து வெளியே வந்த நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து அல்லு அர்ஜுன் கைதுக்கு அம்மாநில பாஜகவும் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், இந்த விவகாரம் அம்மாநில சட்டப்பேரவை வரை ஒலித்த நிலையில், பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கும், தெலுங்கு திரை நடிகர்களுக்கும் அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் பேசியதாவது,
புஷ்பா 2 படம் வெளியான முதல் ஷோவிற்கு, சந்தியா திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் வந்தால் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும், அவர் அடுத்த நாள் படம் பார்க்க வந்துள்ளார். அதுவும் கார் ரூஃப் கதவு திறந்து ரோட் ஷோ காட்டிக்கொண்டு வருகிறார். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. அப்போது சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்த நிலையில், அந்த பெண்ணின் மகனும் பலத்த காயமடைந்தார்.
பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்த போதிலும், தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்றுகொண்டு கை அசைத்துக் கொண்டிருந்தார்; இப்படிப்பட்ட ஒருவர் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? போலீசார் கைது செய்வோம் என மிரட்டிய பிறகே அல்லு அர்ஜுன் தியேட்டரை விட்டு வெளியேறினார். வெளியேறும்போது கூட அவர் மீண்டும் காரின் கூரை கதவில் இருந்து ரோட் ஷோ செய்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுன் கால்களை இழந்தாரா, கண்களை இழந்தாரா, அல்லது கிட்னியை தான் இழந்தாரா?. அவரது இல்லத்துக்கு பிரபலங்கள் விரைந்து சென்று அவரை பார்க்க வேண்டிய அவசியம் என்ன? காயமடைந்த சிறுவனைப் பற்றி சினிமா பிரபலங்கள் யாராவது அக்கறை காட்டினார்களா? சினிமா பிரபலங்கள் யாராவது பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று தான் பார்த்தார்களா?
போலீஸ் நிலைமை சரியில்லை என்று கூறியும் சென்றுள்ளீர்கள். பின் வெளியேர சொல்லியும் road ஷோ நடத்தியுள்ளார். உங்களுக்கு பிசினஸ் முக்கியம் என்றால் மருத்துவ மனையில் கோமா நிலையில் இருக்கும் அந்த மகனை பற்றி கவலை அரசுக்கு. நான் முதலமைச்சராக இருக்கும் வரை இனி தெலங்கானாவில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தரப்படாது; திரைத்துறைக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் கிடைக்காது. டிக்கெட் கட்டண உயர்வுகளும் இருக்காது." என்று கூறினார்.
முதல்வர் ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு பாஜகவினர் குரலெழுப்பிய நிலையில், "நான் பழங்குடியின பின்புலத்தில் இருந்து வந்திருக்கேன். நாளைக்கு இந்த பதவி இருக்கும், இருக்காது. ஆனால் சுயமரியாதை, மக்கள் நலன் எனக்கு முக்கியம்" என்று கூறி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!