Cinema

Twist கொடுத்த Bigg Boss ; யாரு Best Actor? விசாரிக்கும் விஜய் சேதுபதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசன் தொடங்கி 75 நாட்களை கடந்து விட்டது. இந்த வாரம் முத்து, ஜாக்குலின் மற்றும் விஷால் ஆகியோரிடையே நடைபெற்ற கேப்டன்சி டாஸ்கில் விஷால் வெற்றி பெற்று 11-வது வாரத்திற்கான கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஷால் கேப்டன்சியில் பிரச்னை ஏற்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்ய ஒரு பொம்மை வழங்கப்பட்டு மூன்று கத்திகளும் வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து இந்த வாரத்திற்கான ஓபன் நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில், அன்ஷிதா, அருண், ஜாக்குலின், பவித்ரா, ரயான், சௌந்தர்யா, தீபக், மஞ்சரி, முத்துக்குமரன், ராணவ் மற்றும் ரஞ்சித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பிஸ்கட்டை வைத்து ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. இதில், போட்டியாளர்களின் நெற்றியின் மேலே ஒரு பிஸ்கட் வைக்கப்படும் அதை முக அசைவுகளால் போட்டியாளர்கள் வாய் வரை கொண்டு வந்து உண்ண வேண்டும். ஒரு பிஸ்கட்க்கு 500 pointsகள் வழங்கப்படும். இதில் மொத்தமாக, 4000 pointsகள் வென்ற போட்டியாளர்கள் இந்த வாரத்திற்கு ஷாப்பிங் செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் 'செங்கலா செங்கலா' என்ற weekly டாஸ்க் தொடங்கியது. இதில் ரயான், ரஞ்சித், ஜாக்குலின் ஆகியோர் ஒரு அணியாகவும், விஷால், சவுந்தர்யா, அருண் ஆகியோர் ஒரு அணியாகவும், பவித்ரா, அன்ஷிதா, ஜெப்ரி ஆகியோர் ஒரு அணியாகவும், ராணவ் மஞ்சரி ஒரு அணியாகவும், முத்து, தீபக் ஒரு அணியாகவும் பிரிந்தனர். செங்கல்லை வைத்து கோட்டை உருவாக்கும் இந்த physical டாஸ்க் துவங்கியது. இதில் ராணவ் மற்றும் ஜெஃப்ரி இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் ராணவ் கீழே விழுந்து, அவருக்கு விபத்து ஏற்பட்டது. ராணவ் தோள்பட்டையில் ஏற்பட்ட வலியால் துடித்த பொழுதிலும் அன்ஷிதா, ஜெப்ரி, சவுந்தர்யா அது நடிப்பு என பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் இறுதியில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அவருக்கு ligament tear ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து ராணவிடம் சக போட்டியாளரகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து ராணவ் இந்த டாஸ்கில் பங்கேற்க முடியாது என்று அறிவித்த பிக்பாஸ், மஞ்சரி, தீபக் மற்றும் முத்துகுமரனை ஒரே அணியாக மாற்றினார். மேலும் கன்வேயர் பெல்ட் வழியாக வந்த கற்களை போட்டியாளர்கள் சேர்க்க தொடங்கினர். இதில் கற்களை ஒரு அணியிடம் இருந்து மற்றொரு அணி எடுப்பதிலும் கவனத்துடன் செயல்பட்டது. ஏற்கனவே ராணவிற்கு ஏற்பட்ட அடியால் இந்த டாஸ்கை போட்டியாளர்கள் முடிந்த வரை கவனத்துடன் கையாள முயன்றனர்.

எனினும் ஜெஃப்ரி, முத்துகுமரனிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு, மஞ்சரி, ஜாக்குலின், பவித்ரா மற்றும் அன்ஷிதா ஆகியோர் டாஸ்க்கிற்காக ஒருத்தரை ஒருத்தர் கையாண்ட விதம் பார்வையாளர்களுக்கு சற்று பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே அமைத்தது. இதில் முதலாவதாக குறைவான கற்களை வைத்திருக்கும் அணி வெளியேற்றப்படும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து நடைபெற்ற டாஸ்கின் இறுதியில் red அணியான அருண், விஷால், சவுந்தர்யா ஆகியோர் குறைவான கற்களை வைத்திருந்ததால் டாஸ்கில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, இந்த டாஸ்கில் rose, blue, green ஆகிய மூன்று அணிகளும் தொடர்ந்து விளையாடினர். இவர்களுக்கு இந்த டாஸ்கில் முயல் பொம்மைகள் அனுப்பி வைக்கப்படும் அவரை செங்கல்லை வைத்து உருவாக்கிய கோட்டையின் உள்ளே வைத்து பாதுகாக்க வேண்டும் என பிக்பாஸால் அறிவிக்கப்பட்டது. இதில் blue, green ஆகிய இரு அணியும் சேர்ந்து rose அணியை தகர்க்க முயன்றதில், இறுதியில் green அணியிடம் 4 முயல் பொம்மைகள் இருந்ததால் ஜாக்குலின், ரஞ்சித் மற்றும் ரயான் ஆகியோர் இருந்த green அணி வெற்றி பெற்றதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்த டாஸ்கில் வெற்றி பெற்று ரயான் nomination free pass வென்றார்.

அனைத்து சீசன்களை போலவே இந்த சீசனிலும் red carpet அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முறை அந்த உபசரிப்பு ஜாக்குலின்க்கு என அறிவிக்கப்பட்டது. இதில் முதலாவதாக red carpet விரிக்க ரயான் தேர்ந்தெடுக்க பட்டாலும் பின்னர் மஞ்சரியிடம் பொறுப்பு மாற்றி வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 8, 75 நாட்களை கடந்து விட்டது. இதை அறிவித்த பிக்பாஸ், இந்த வாரத்திற்காக சிறந்த போட்டியாளர்களையும், சரியாக பங்கேற்காத போட்டியாளர்களையும் தேர்வு செய்யும்படி கூறினார். இதில், பவித்ரா, முத்து, ஜெஃப்ரி ஆகியோர் சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அதே போல, அன்ஷிதா, சௌந்தர்யா ஆகியோர் சிறப்பாக பங்கேற்காக போட்டியாளர்களை தேர்வாகினர்.

இதையடுத்து அடுத்த வாரத்திற்கான கேப்டன்சி டாஸ்க் தொடங்கியது. இதில் ஒரு பந்து வழங்கப்பட்டு எந்த நபரின் பக்கத்தில் கோல் போடப்படுகிறது, அந்த நபர் வெளியேற்றபடுவார் என்று தெரிவிக்கப்பட்டது பவித்ரா, முத்து, ஜெஃப்ரி ஆகியோர் பங்கேற்றனர். முதலாவதாக ஜெஃப்ரி வெளியேறினார், இதையடுத்து பவித்ரா, முத்து இடையே நடைபெற்ற போட்டியில் முத்து அலட்சியமாக வெளியாகி விட்டுக்கொடுக்க பவித்ரா கோல் போட்டு வெற்றிபெற்றார்.

எனினும், இவ்வளவு அலட்சியம், நண்பர்களுக்கு உதவும் நோக்கில் nomination free வழங்கி காப்பாற்றுவது போன்று விளையாடியதால் கோபப்பட்ட பிக்பாஸ், போட்டியாளர்களை எச்சரித்ததுடன், அடுத்த வாரத்திற்காக நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கை ரத்து செய்வதுடன், ரயானுக்கு வழங்கிய nomination free passயும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் கலங்கிப்போன முத்துக்குமரன் பிக்பாசிடம் மன்னிப்பு கேட்க, போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து பிக்பாஸிடம் மன்னிப்பு கேட்டு re consider பண்ணுங்க என்று கேட்டுக்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை சந்திக்க வந்த விஜய் சேதுபதி, "இந்த வாரம் நம்ம போட்டியாளர்களுடைய ஆட்டம் தீவிரம் அடைஞ்சிருக்கு, ஆனா நீங்க ஜெய்கரதுக்காக விளையாடுங்கனு சொல்லுறோம், இன்னோருத்தங்க ஜெய்க்கறதுக்காகவும், மத்தவங்க தோக்குறதுக்காகவும் விளையாடுறாங்க அந்த drama over ஆயிடுது. ஆனா பிக்பாஸ் இந்த வாரம் அந்த drama க்கு கொடுத்தாருல ஒரு twist; நல்லா நடிக்குறாங்க, செமையா நடிக்குறாங்கனு ஆயிரம் பாராட்டு இருந்தது. யாரு best actor னு விசாரிச்சு பாத்துருவோமா" என கூறி போட்டியாளர்களை சந்திக்கும் காட்சிகள் இன்றைய promoவில் இடம்பெற்றுள்ளது.

Also Read: உரிமைக்காக, ஒடுக்குமுறைக்காக புரட்சிகள் நடப்பது இயல்பு ; Managers vs Workers - BB வீடு!