Cinema
நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் : பின்னணியில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ?
மும்பையில் அஜித்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாதநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மல் நகர் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி காந்தி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொலைக்கு பின்புறம் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
மும்பை போக்குவரத்து காவல் துறையின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு இந்த மிரட்டல் வந்துள்ளது. அதில், "சல்மான் கான் உடனே 5 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில், பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை அவருக்கு ஏற்படும். இந்த செய்தியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம்." என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் சல்மான் கானுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மும்பை போக்குவரத்து காவல் துறையின் வாட்ஸ் ஆப் நம்பருக்கு வாட்ச் மிரட்டலில் 5 கோடி ரூபாய் கொடுக்கவில்லையெனில், பாபா சித்திக்கிற்கு ஏற்பட்டதைவிட மோசமான நிலை சல்மான் கானுக்கு ஏற்படும் என்று கூறபட்டுள்ளது.
மேலும் முன்னதாக ஏற்கனவே சல்மான் கான் வீட்டின் மீது மர்ம நபர்கள் கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தியும், பண்ணை வீட்டில் வைத்து சல்மான் கானை கொலை செய்ய முயற்சி நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!