Cinema
70- வது தேசிய விருதுகள் அறிவிப்பு : விருதுகளை அள்ளிக் குவித்த 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படம் !
இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான 70- வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தேசிய அளவில் சிறந்த படத்துக்கான விருது 'ஆட்டம்' என்ற மலையாள படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த தமிழ் படமாக 'பொன்னியின் செல்வன் - 1' திரைப்படமும், சிறந்த மலையாள படமாக 'சவுதி வெள்ளைக்காரா' திரைப்படமும, சிறந்த கன்னட படமாக 'KGF - 2' திரைப்படமும், சிறந்த இந்தி படமாக 'குல்மோகர்' திரைப்படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்தில் நடித்த நித்தியா மேனன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகராக காந்தாரா திரைப்பட நடிகர் ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
'திருச்சிற்றம்பலம்' படத்துக்காக சிறந்த நடன இயக்குனர்கள் விருது ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
70- ஆவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 'பொன்னியின் செல்வன் -பாகம் 1'படத்துக்காக சிறந்த பின்னணி இசை விருது ஏ.ஆர்.ரகுமானுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது ரவிவர்மனுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.
சிறந்த பின்னணி பாடகி விருது பாம்பே ஜெயஸ்ரீக்கு வழங்கப்பட்டுள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!