Cinema
‘ஒரு பக்கத்தை தேர்ந்தெடுங்கள்...’ - அர்ஜுன் தாஸ், காளிதாஸின் ‘போர்’ படத்தின் First Look வெளியீடு!
தமிழில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள்தான் அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ். இவர்களது நடிப்பில் தற்போது உருவாகும் திரைப்படம்தான் 'போர்'. பிஜோய் நம்பியார் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படமானது தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகவுள்ளது. இதில் இந்திப்பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிகின்றனர். இந்த நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் காளிதாஸ் மற்றும் அர்ஜுன் தாஸ் இடம்பெற்றுள்ளனர்.
வாழ்வின் தார்மீக சிக்கல்கள் மற்றும் மனித இயல்புகளை இரண்டாக பிரிக்கும் இந்த போஸ்டர், விஷுவலாக இரண்டு போஸ்டர்கள் போன்று, பாதி பாதியாக பிரிந்துள்ளது. இதிலிருந்து பார்வையாளர்களை ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்கச் சொல்லும், வித்தியாசமான சவாலைத் தருகிறது இந்த ஃபர்ஸ்ட் லுக். "போர்", திரைப்படம் கதை சொல்லலின் எல்லைகளைத் மாற்றியமைத்து, மக்களுக்கு ஒரு வித்தியாசமான, பரபரப்பான அனுபவத்தை தரும் படைப்பாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.
பார்வையாளர்கள் தங்கள் நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கும், தேர்வு செய்வதற்கும் ஒரு காட்சி அழைப்பாக இந்த போஸ்டர் செயல்படுகிறது. மேலும் அந்த போஸ்டரில் Pick A Side (இதிலிருந்து ஒரு பக்கத்தைத் தேர்ந்தெடுங்கள்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!