Cinema
ரகளையில் ஈடுபட்ட ஜெயிலர் பட வில்லன் நடிகர் : அதிரடியாக கைது செய்த கேரள போலிஸ்!
தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி குணச்சித்திர நடிகராக வளம் வருபவர் விநாயகம். இவர் மலையாளத்தில் 1995ம் ஆண்டு வெளிவந்த மாந்திரிகம் படத்தில் அறிமுகமானர். பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்த அவருக்குத் தமிழில் வெளிவந்த திமிரு படம் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.
இதையடுத்து மலையாளம் மற்றும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் அசித்தி வருகிறார். அண்மையில் வெளிவந்து அனைவராலும் பாராட்டப்பட்ட ஜெயிலர் படத்தில் வர்மன் என்ற மிரட்டலான அவரது பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், இவரது குடியிருப்பில் எழுந்த பிரச்சனை தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது போலிஸாரிடம் ரகளையில் ஈடுபட்டுள்ளார். மேலும் அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸார் அவரை கைது செய்தனர். பின்னர் நடிகர் விநாயகன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!