Cinema

OXYGEN CYLINDER TASK : பிரதீப்பை துவைத்தெடுத்த விஜய்.. Red Card கொடுத்து வெளியே அனுப்பப்படுவாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், முதல் வாரம் போட்டியாளர் அனன்யா குறைவான வாக்குகள் பெற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து உடல்நல குறைவு காரணமாக பவா செல்லதுரை வெளியேறினார். இதனால் 2-வது வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து 16 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் வீடு 3-வது வாரத்திற்கான தனது பயணத்தை தொடங்கியது. 3-வது வார கேப்டன்சி டாஸ்கில் வெற்றி பெற்று யுகேந்திரன் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆனார். இந்த முறை இரண்டு வீடு என்பதால் வார வாரம் கேப்டன் 6 நபர்களை தேர்வு செய்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அந்த வகையில் மாயா, விஷ்ணு, பிரதீப், சரவண விக்ரம், பூர்ணிமா, வினுஷா ஆகியோர் கேப்டன் யுகேந்திரனால் தேர்ந்தெடுக்கபட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

2-வது வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டு நபர்கள் கன்டென்ட்டிற்காக strike போன்ற பல வேலைகள் செய்திருந்தாலும், அதுவே பரவாயில்லை என்று கூறும் அளவிற்கு இந்த வாரம் வீடு சற்று ஆட்டம் கண்டு விட்டது. பிக்பாஸ் வீட்டின் 3-வது வார நாமினேஷன் பிராசஸில் நிக்சன், அக்ஷயா, மணி, விசித்ரா, ஐஷூ, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம் மற்றும் பிரதீப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் விஷ்ணு எவ்வாறு நாமினேட்ஷனில் இடம்பெறாமல் போனார் என்பது ஸ்மால் பாஸ் வீட்டாரை வியப்பில் ஆழ்த்தியது. இந்த வார பிக்பாஸ் வீட்டின் ஷாப்பிங் டாஸ்கில் ஒரு ட்விஸ்ட், இரு நபர்கள் மட்டுமே ஷாப்பிங் செல்ல வேண்டும்; அதுவும் ஆளுக்கு ஒரு பாஸ்கெட் தான். அடுத்தத்தாக சுத்தம் செய்யும் டாஸ்கில் ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு வெற்றி, தொடர்ந்து பாத்ரூம் சுத்தம் செய்யும் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டாருக்கு வெற்றி கிடைத்தது.

இது என்னப்பா ஒரு சுவாரஸ்யமே இல்லை என்று ரசிகர்கள் சலித்து கொள்ளும் தருணத்தில் கூல் சுரேஷை களத்தில் இறக்கி விட்ட பிக்பாஸ், ராசிபலன் கூற வேண்டும் என்று டாஸ்க் கொடுத்தார். இந்த டாஸ்கில் கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டாரின் செயல்பாடுகளை தனக்கே உரிய பாணியில் புட்டுப்புட்டு வைத்திருந்தாலும், விசித்திராவை யானை என்று கூறி உருவ கேலி செய்தது பிக்பாஸ் வீட்டினரிடமும், இந்த ஷோவை காணும் ரசிகளிடமும் சற்று முகச் சுளிப்பை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்தது. இருப்பினும் எதர்க்கும் சளைக்காதவன் இந்த கூல் சுரேஷ் என்று தனது தவறுக்கு விசித்திராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

இதன் தொடர்ச்சியாக இந்த வார ஸ்டார் யாருக்கு என்று தேர்ந்தெடுக்க பிக்பாஸ் வீட்டார், தாங்கள் கடந்து வந்த பாதைகளை விவரித்தனர். இதில் சிலரது கதை சற்று நெஞ்சை உருகும் வகையிலேயே அமைந்தது. இறுதியாக ஸ்டார் யாருக்கு என்று தேர்வு செய்யும் தருணத்தில், ஸ்மால் பாஸ் வீட்டார் அக்ஷயாவை தேர்வு செய்தனர்.

அடுத்ததாக வீட்டில் 'சாப கல்' டாஸ்க் நடைபெற்றது. இது கூல் சுரேஷில் தொடங்கி மணி, ரவீனா, அக்ஷயா, ஐஷு, விஜய் வர்மா என அந்த சாப கல் மாறி மாறி சென்று இறுதியில் அக்ஷயாவிற்கு கொடுக்கப்பட்டது. இதனால் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அக்ஷயா, அடுத்த வார நாமினேஷனிலும் நேரடியாக இடம்பெறுகிறார். என்னதான் விதவிதமாக டாஸ்க் நடந்தாலும் இந்த வாரம் சுவாரசியம் சற்று குறைவாக இருந்ததாக பிக்பாஸ் நினைத்தாரோ என்னவோ, ஆக்சிஜன் சிலிண்டர்களை வைத்து ஒரு டாஸ்க் இரு வீட்டாரிடையே நடத்தப்பட்டது.

இதில், கேப்டன் யுகேந்திரன் எந்த வீட்டின் தரப்பில் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்ட்டது. 30 ஆக்சிஜன் சிலிண்டருடன் தொடங்கப்பட்ட இந்த டாஸ்கில், சிலிண்டரை எடுப்பதற்காக ஸ்மால் பாஸ் வீட்டின் கதவை உடைத்த நிக்சன்,போட்டியாளர்களிடையே உக்கிரமாக நடந்து கொண்ட விஜய், விஷ்ணுவை தடுப்பதற்காக அவரை கீழே தள்ளி அமுக்கியது, குறிப்பாக WWE ஆடுவதாக நினைத்து கொண்டு பிரதீப்பை தூக்கி கீழே போட்டது போன்றவை கண்டிக்கத்தக்கது.

முதல் வாரம் பிரதீப்பிடம், நீ வெளியே சென்றால் எனக்கு பிடித்தவர்கள் சம்பவம் செய்து விடுவார்கள் என கூறி சர்ச்சையை கிளப்பி இருந்த விஜய் வர்மா, தொகுப்பாளர் கமலிடம் yellow card வாங்கி இருந்தார். இருப்பினும் அதையெல்லாம் மறந்து விட்டு தனது ஆக்ரோஷமான செயல்பாடுகளை வீட்டில் உள்ள சகபோட்டியாளர்களிடம் விஜய் வெளிப்படுத்தியதால் இந்த வாரம் தொகுப்பாளர் கமல், விஜய்க்கு மீண்டும் 2-வது yellow card வழங்குவார் என்று ஒரு சில தரப்பினரும், விஜய் வர்மா வன்முறையில் ஈடுபட்டதால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வீட்டில் இருந்து வெளியே அனுப்பப்படலாம் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை சந்தித்த தொகுப்பாளர் கமல், ஸ்மால் பாஸ் வீட்டாரிடம் நீங்க என்ன பிஸ்தாவா? மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்று கேள்வி எழுப்பி இருந்தார். ஸ்மால் பாஸ் வீட்டில் வசதிகள் குறைவுதான் என்றாலும் அவர்கள்தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், உழைப்பிற்கும் சந்தோஷத்திற்கு தொடர்பு உள்ளது என்றும் கூறினார். தொடர்ந்து சாப கல் டாஸ்க் குறித்து பேசிய கமல் 'வரம், சாபம்' மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், எனவே 'சாபக் கல்' என்பதற்கு பதிலாக 'தடைக்கல்' என்று வைத்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

தொடர்ந்து இந்த தடை கல்லை வைத்து புது கேம் ஆடிய கமல், போட்டியாளர்கள் தங்களது முன்னேற்றத்திற்கு யார் தடையாக இருப்பார்கள் என்று கருத்துகின்றனரோ அவர்களுக்கு அந்த கற்களை வழங்கும்படி கூறினார். அதில், 11 கற்கள் மாயாவிற்கும், 5 கற்கள் ரவீனாவிற்கும் கிடைத்தன. 'மத்தவங்க வெற்றிக்கு தடையாக இருப்பதுதானே கேம்? அதில் எனக்குப் பெருமைதான்' என்று அதிக கற்களை பெற்றிருந்த மாயா விளக்கமளித்தார். நேற்றைய நிகழ்ச்சியில் நாமினேட் செய்யப்பட்ட 11 போட்டியாளர்களில் பிரதீப், நிக்சன், மாயா ஆகியோரை காப்பாற்றிய தொகுப்பாளர் கமல், இன்றைய நிகழ்ச்சியில் யாரை வீட்டில் இருந்து வெளியேற்றவுள்ளார் என்பதை பொறுத்திருந்தது காண்போம்.

- சீ.ரம்யா

Also Read: BIGGBOSS: இது நிஜ சண்டை இல்லை; பரபரப்பை கிளப்பிய கமல்ஹாசன்; ஆரம்பிக்கலாங்களா?