Cinema
மோடி ஸ்டேடியத்தில் காணாமல் போன 24 காரட் தங்க IPHONE : குமுறும் ‘தி லெஜெண்ட்’ பட நடிகை !
இந்தியாவில் கடந்த 5-ம் தேதி முதல் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய முன்தினம் (14.10.2023) அன்று, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியை காண பலரும் வருகை புரிந்தனர்.
நாடு முழுவதும் இருந்து திரை பிரபலங்களும் ஸ்டேடியத்துக்கு வருகை தந்தனர். பெரும் ஆரவாரத்துக்கும், எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியா வெற்றி பெற்றதையடுத்து ரசிகர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த சூழலில் இந்த போட்டியை காண சென்ற பிரபல நடிகை தனது ஐ போன் தொலைந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக அறியப்படுபவர் ஊர்வசி ரவுத்தாலா (Urvashi Rautela). உத்தரகாண்டை சேர்ந்த இவர், பிரபல மாடல் அழகியாவார். 2015-ம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தையும் பெற்றவர் ஆவார். இந்தி படத்தில் 2013-ல் அறிமுகமான இவர், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த ஆண்டு 'தி லெஜெண்ட்' படத்தில் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்திருந்தார். தொடர்ந்து தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த சூழலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண அகமதாபாத் சென்றிருந்த இவரது 24 காரட் தங்க ஐ போன் தொலைந்து விட்டதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை யாரேனும் பார்த்தால் கண்டுபிடித்து கொடுக்கும்படியும் கேட்டுள்ளார். அதோடு தனது போனை காணவில்லை என்று அகமதாபாத் போலீசில் புகாரும் அளித்துள்ளார். இவர் தொலைத்த இந்த ஐபோனின் விலை சுமார் 10 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகார் SIR : பா.ஜ.க.வை வெற்றி பெற வைக்கும் அமைப்பாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது - முரசொலி விமர்சனம் !
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!