Cinema
தி ரோட் முதல் 800 வரை.. நாளை திரையரங்கில் வெளியாகும் தமிழ் 8 படங்கள் பட்டியல் இதோ !
தமிழில் நாளை வெளியாகும் திரைப்படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
=> தி ரோட் :
த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை அருண் வசீகரன் இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள் இந்த படமானது, 2000 ஆம் ஆண்டு நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ளது. இந்த படம் திரையரங்குகளில் நாளை வெளியாகிறது.
=> ரத்தம் :
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
=> இறுகப்பற்று :
யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம், நாளை வெளியாகிறது.
=> 800 :
பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம்தான் 800. ஆஸ்கர் வென்ற 'ஸ்லம்டாக் மில்லியனர்' (Slumdog Millionaire) படத்தில் நடித்திருந்த மதுர் மிட்டல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நாளை வெளியாகிறது.
=> மார்கழி திங்கள் :
மனோஜ் கே பாரதிராஜா இயக்கத்தில், பாரதி ராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.
=> ஷாட் பூட் த்ரீ :
இந்திய அமெரிக்க வாழ் இயக்குநரான அருண் வைத்தியநாதன் இயக்கி தயாரித்துள்ள இந்த படத்தில் சினேகா, வெங்கட் பிரபு யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பல்வேறு உலக நாடுகளில் நடை பெற்று வரும் திரைப்பட விழாக்களில் சிறந்த குழந்தைகள் திரைப்படமாக திரையிடப்பட்டுவரும் ‘ஷாட் பூட் த்ரீ’ படம் நாளை வெளியாகிறது.
=> எனக்கு என்டே கிடையாது :
விக்ரம் ரமேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அவரே நடித்துள்ளார். ஹங்க்ரி வுல்ஃப் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கார்த்திக் வெங்கட்ராமன் தயாரித்துள்ள இந்த படம் நாளை வெளியாகவுள்ளது.
=> தில்லு இருந்தா போராடு :
எஸ்.கே.முரளிதரன் இயக்கத்தில் வனிதா விஜயகுமார், யோகி பாபு, அனுகிஷானா, கார்த்திக் தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம், நாளை வெளியாகவுள்ளது.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!