Cinema

ஏலத்தில் விடப்பட்ட Harry Potter-ன் முதல் பாகம் புத்தகம்.. ரூ.15 லட்சத்துக்கு விற்பனை !

90'ஸ் கிட்ஸ்களின் பிடித்த ஒரு காமிக் என்றால் அதில் முதலில் இருப்பது 'ஹாரி பாட்டர்' தான். மாய உலகில் நடக்கும் விஷயங்களை இந்த ஹாரி பாட்டர் தொடரில் காட்டியிருப்பார்கள். ஜெ.கே.ரெளலிங்க் கைவண்ணத்தில் உருவான இந்த கதை முதலில் நாவலாக தான் இருந்தது. பின்னர் இதனை நாடக மேடையில் அரங்கேற்றினர்.

அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இது வரவேற்பை பெற்றதால், இதனை படமாக எடுக்க திட்டமிட்டனர். அதன் படி இது படமாக்கப்பட்டது. தற்போது இருக்கும் உலகம் போன்று, வேறொரு இடத்தில் மாய உலகம் இருப்பதாகவும், அதில் நடக்கும் இன்னல்களை ஹீரோ எதிர்கொண்டு வில்லனை தோற்கடிப்பதும் கதையாக அமைந்துள்ளது.

மொத்தம் 7 பகுதிகளாக வெளியான நாவலை அப்படியே படமாக ஆக்கப்பட்டது. இதில் முதல் 2 பகுதிகளை கிரிஸ் கொலம்பஸ், 3-ம் பகுதியை அல்பான்ஸோ கெளரா, 4-ம் பகுதியை மைக் நெவல், 5-ல் இருந்து 8-ம் பகுதி வரை டேவிட் யாட்ஸ் என மொத்தம் 4 இயக்குநர்கள் இயக்கினர். 8 பகுதிகளாக எடுக்கப்பட்ட இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 2011-ல் இப்படத்தின் முதல் பாகம் வெளியானாலும், இன்றளவும் இந்த படம் தலைசிறந்து காணப்படுகிறது. இந்த படத்தில் உள்ள கதாபாத்திரங்களும் நிலைத்து நிற்கிறது.

முன்னதாக புத்தகமாக வெளியான இந்த ஹாரி பாட்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது அதிகமாக விற்பனையான புத்தகங்களில் முதன்மையானதாக விளங்கியது ஹாரி பாட்டர் புத்தகம் தான். இந்த ஹாரி பாட்டர் புத்தகத்தின் முதல் பாகமான 'Harry Potter Philosopher's Stone' 1997-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து இதன் 7-வது பாகமான 'Harry Potter Deathly Hallows' 2007-ல் வெளியானது. இதுவே இந்த கதையின் கடைசி பாகமாகும்.

இந்த நிலையில் முதல் பாகமான 'Harry Potter Philosopher's Stone' திருத்தம் செய்யப்படாத அசல் பிரதி அண்மையில் ஏலத்தில் விடப்பட்டது. இந்த புத்தகத்தை வாங்க பலரும் வரிசை கட்டி ஆவலாக ஏலத்தில் எடுக்க முயன்றதில் தற்போது இந்த புத்தகம் £15,000 (இந்திய மதிப்பில் ரூ.15 லட்சம்) பணத்திற்கு ஏலம் போயுள்ளது.

பலரும் போட்டிபோட்டு இதனை இங்கிலாந்தின் ஃபாரிங்டன் நகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். இதனை பெற்றுக்கொண்ட அவர், சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தனது ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் இந்த புத்தகத்தை வைக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: “மந்திரக்கோல்.. டம்பிள்டோர்..” - ப்பா.. Harry Potter பட பாணியில் திருமணம்.. இவ்வளவு லட்சம் பணம் செலவா ?