Cinema
Selfie எடுக்க வந்த ரசிகரை சட்டென்று தள்ளிவிட்ட பவுன்சர்கள்.. தமன்னா செய்த செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி !
இந்தியாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ரஜினியின் ஜெயிலர் படத்தில் "காவாலா.." பாடலில் இவரது நடனம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார். இடையில் இவர் குறித்த செய்திகள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், இவரது ரசிகர்கள் இவரை கொண்டாடியே வந்தனர்.
இந்த சூழலில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தார். அப்போது இவருடன் வழக்கம்போல் பாதுகாப்புக்கு பவுன்சர்களும் சென்றனர். இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து தனது காருக்கு திரும்பிய தமன்னா, செல்லும் வழியில் குவிந்த ரசிகர்களுக்கு கையசைத்து வணக்கம் வைத்தார்.
அப்போது அங்கிருந்த பாதுகாப்பு வளையத்தை மீறி ரசிகர் ஒருவர் துள்ளி குதித்து நடிகை தமன்னாவின் கை குலுக்கினார். கையை விடாமல் வைத்திருந்த ரசிகரை அங்குள்ள பவுன்சர்கள் வேகமாக தள்ளிவிட்டனர். அப்போது அந்த ரசிகர் "ஒரு முறை.. please" என்று கேட்கவே, தமன்னாவும் விடுங்கள் தான் பார்த்துக்கொள்வதாக கூறினார்.
இதையடுத்து அந்த ரசிகர் தமன்னாவுடன் கை குலுக்கி செல்பி எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னர் குஷியில் அந்த ரசிகர்கள் கத்தி மகிழ்ச்சியை தெரிவித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி தமன்னாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!