Cinema
புனித் ராஜ்குமார் குடும்பத்தில் மேலும் சோகம்.. திருமண நாளை கொண்டாட வெளிநாடு சென்ற நடிகரின் மனைவி மரணம் !
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் விஜய ராகவேந்திரா. 1982-ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து பிரபலமானார். சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று Kotreshi Kanasu படத்திற்காக தேசிய விருதையும் வென்றார். பின்னர் 2015-ல் வெளியான Shivayogi Sri Puttayyajja என்ற படத்திற்காக சிறந்த நடிகராக தேர்ந்தெடுக்கப்பட்டு கர்நாடக மாநில விருதையும் வென்றார்
தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஒரு படத்தை இயக்கத்தோடு, சில பாடல்களையும் பாடியுள்ளார். இப்படி பன்முகத்தன்மை கொண்டவராக இருக்கும் இவருக்கு ஸ்பந்தனா என்ற இளம்பெண்ணொடு, 2007-ம் ஆண்டு திருமணமானது.
பெங்களூருவை சேர்ந்த ஸ்பந்தனாவின் தந்தை காவல்துறை அதிகாரியாக உள்ளார். விஜய ராகவேந்திரா - ஸ்பந்தனா தம்பதிக்கு சௌர்யா என்ற ஒரு மகன் உள்ளார். இந்த சூழலில் இவர் தனது 16-வது திருமண நாள், இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இதனால் தாங்கள் குடும்பத்துடன் அதனை கொண்டாட திட்டமிட்டு பாங்காங் செல்ல எண்ணியுள்ளனர்.
அதன்படி பாங்காங்கிற்கு சென்ற ஸ்பந்தனாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் தற்போது அவரது குடும்பத்தை மீளா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது இவரது உடல் நாளை இந்தியாவுக்கு எடுத்து வரக்கூடிய ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விஜய ராகவேந்திராவின் மனைவி ஸ்பந்தனாவின் மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருமண நாளை கொண்டாட வெளிநாடு சென்ற நடிகரின் மனைவி மாரடைப்பில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய ராகவேந்திரா, மறைந்த கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். தற்போது உயிரிழந்த ஸ்பந்தனா, ஒரு கன்னட படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மேலும் விஜய ராகவேந்திரா நடித்து இயக்கிய 'கிஸ்மத்' படத்தை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!