Cinema
காணாமல் போன பணம்.. பணிப்பெண் மீது சந்தேகம்.. நடிகை ஷோபனா செய்த செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி ! - நடந்தது ?
பிரபல நடன கலைஞராக அறியப்படுபவர் தான் ஷோபனா. ஆரம்பத்தில் நடனத்தில் மட்டும் நாட்டம் கொண்ட இவர், பிறகு நடிப்பிலும் இறங்கினார். கேரளாவை சேர்ந்த இவர், மலையாள திரையுலகில் முதலில் அறிமுகமானார். பின்னர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தார். தமிழிலும் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'தளபதி' படம் இவருக்கு பெரும் பெயரை பெற்று தந்தது.
இந்த சூழலில் இவர் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் விஜயா என்ற பணிப்பெண்ணும் உள்ளார். 1 ஆண்டுக்கும் மேலாக வேலை பார்த்து வரும் இவர், அவரது வீட்டில் இருக்கும் ஷோபனாவின் தாயாரை கவனித்து வருகிறார். இந்த நிலையில் ஷோபனா வீட்டில் இருந்து கடந்த சில தினங்களாக பணம் காணாமல் போயுள்ளது.
ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளாத ஷோபனா, பிறகு போலிசில் புகார் கொடுக்க எண்ணியுள்ளார். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னாள், பணம் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார், விசாரணை மேற்கொண்டனர். அதோடு ஷோபனா, தனது வீட்டில் பணிபுரியும் விஜயா மீது தனக்கு சந்தேகம் இருப்பதாக கூறவே, அவரிடமும் விசாரித்தனர்.
அப்போது விஜயா தான்தான் பணத்தை திருடியதாக உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் தனது வீட்டில் பண கஷ்டம் என்பதால் தான் திருடி விட்டதாகவும், மொத்தம் ரூ.41 ஆயிரம் வரை திருடியதாகவும் ஒப்புக்கொண்டார். அதோடு தான் செய்த தவறுக்கு வருந்துவதாகவும் கூறி மன்னிப்பும் கேட்டார். இதையடுத்து ஷோபனா தனது பணிப்பெண் விஜயாவை எச்சரித்து புகாரை திரும்ப பெற்றார்.
மேலும் விஜயாவின் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரை மீண்டும் வேலைக்கு எடுத்துக் கொண்டார். திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து கழித்துக் கொள்வதாகவும் ஷோபனா கூறியுள்ளார். வீட்டில் பணம் திருடி மாட்டிக்கொண்ட பணிப்பெண்ணை பணியை விட்டு நீக்காமல் மீண்டும் பணிக்கு அமர்த்தியுள்ள ஷோபனாவுக்கு ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!