Cinema
புதிதாக வாங்கிய பைக் : நேற்று REELS.. இன்று RIDE.. சாலை விபத்தில் பிரபல இளம் நடிகருக்கு நேர்ந்த சோகம் !
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள சாம்ராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் பாபு (38). குண்டலுபேட்டை தாலுகாவில் உள்ள தொடுப்பூரை என்ற பகுதியில் வசித்து வரும் இவர், கன்னட திரையுலகில் பிரபல இளம் நடிகராக இருக்கிறார். சில ஷார்ட் பிலிம்ஸில் நடித்து பிரபலமான இவர், சில திரை படங்களிலும் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த சூழலில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிதாக பைக் வாங்கியுள்ளார். அந்த பைக்கில் இவர் மகிழ்ச்சியாக சுற்றி வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை தனது புது பைக்கில் ஊர் சுற்றியுள்ளார். அதோடு, தான் செல்லும் இடங்கள் குறித்து ரீல்ஸ் செய்து வீடியோவையும் வெளியிட்டு வந்துள்ளார். பின்னர் நேற்று தனது சொந்த ஊருக்கு அதே பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிகாலை சுமார் 2.30 மணியளவில் பெங்களூரு - மைசூரு விரைவு நெடுஞ்சாலையில் பயணம் செய்துள்ளார். தொடர்ந்து பயணம் செய்த இவர் காலை சுமார் 5 மணியளவில் பெங்களூரு - மைசூரு விரைவு நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள மாண்டியா மாவட்டம் எலியூரில் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே உடல் துண்டான நிலையில் இருந்த லோகேஷை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கண்டுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் விரைந்த அவர்கள் உடலையும், பாகங்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். அப்போது லோகேஷின் பைக்கை, கார் ஒன்று இடித்து தள்ளி விபத்து ஏற்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த காரின் எண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து லோகேஷின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். புதிதாக வாங்கிய பைக்கில் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பியபோது பிரபல கன்னட இளம் நடிகர் லோகேஷ் சாலை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!