Cinema
“என் உழைப்புக்கு கிடைத்த அளவற்ற அன்பை என்னால் நம்ப முடியவில்லை..” - நடிகை தமன்னா நெகிழ்ச்சி!
விஜயின் 'பீஸ்ட்' படத்துக்கு பிறகு இயக்குநர் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் தமன்னா, ஜாக்கி ஷெராப், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் என ஒரு திரைபட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா..' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடலில் தமன்னா நடமாடியுள்ளார்.
அருண்ராஜா காமராஜ் லிரிக்கில், அனிருத் இசையமைத்துள்ள இந்த பாடலை பிரபல பாடகி ஷில்பா ராவ், அனிருத் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது பெரும் வைரலாகி வரும் நிலையில், திரை பிரபலங்கள் என பலரும் ரீல்ஸ் செய்து வெளியிடுகின்றனர். மேலும் இந்த பாடலுக்கு சிம்ரன், காஜல் உள்ளிட்டோர் நடமாடுவது போல் AI உருவாக்கமும் இணையத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாடலுக்கு தற்போது வைப் செய்து வரும் சூழலில், பாடலுக்காக நடிகை தமன்னா தற்போது நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காவாலா பாடலுக்கு கிடைத்த அளவற்ற அன்பை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது பணிக்கு கிடைத்த மிகப்பெரிய அன்பை பார்த்து மகிழ்கிறேன். எனது இதயத்தின் ஆழத்தில் இருந்து அனைவருக்கும் நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாடலான "Hukum tiger ka hukum.." என்ற பாடல் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெயிலர்' படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெளியீட்டு காரணமாக சிவகார்த்திகேயனின் 'அயலான்', ஷாருக்கின் 'ஜவான்' உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“துறை செயலாளர் இல்லாமல் திண்டாடும் வேளாண் துறை” : தூங்குமூஞ்சி த.வெ.க அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
பாமாயில் விவகாரம் : “3 மாதத்தில் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்...” - தவெக அரசை அம்பலப்படுத்திய உதயநிதி!
-
தமிழ்நாட்டின் உள்நாட்டு பொருளாதாரம் ஏன் தேய்கிறது? : த.வெ.க அரசுக்கு தங்கம் தென்னரசு கேள்வி!
-
🔴LIVE UPDATES: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் - வாக்குச்சாவடியில் முறைகேடு செய்யும் தவெக!
-
துவரம் பருப்பு கொள்முதல் விவகாரம் : வழக்கம்போல் திமுக மீது பொய் பழி... ஸ்டிக்கர் ஒட்டும் தவெக... விவரம்!