Cinema
அணுகுண்டு வெடிப்பு காட்சி.. NO கிராபிக்ஸ்: சினிமா உலகை ஆச்சரியப்பட வைத்துள்ள கிறிஸ்டோபர் நோலன்!
ஹாலிவுட் சினிமாவின் மிகமுக்கிய இயக்குநர்களில் ஒருவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கத்தில் வெளியான மெமன்டோ, தி ப்ரஸ்டீஜ், இன்செப்ஷன், இன்டெர்ஸ்டெல்லார், டெனட் உள்ளிட்ட படங்கள் உலகம் முழுவதும் இவருக்கு ஒரு ரசிகர் படையை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
இவரது படங்களில் அதிகம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெறாது. இதை இவர் விரும்ப மாட்டார். முடிந்த அளவுக்கு நிஜமாகக் காட்சிகளை எடுக்க நினைப்பார். இதனாலேயே இவரது படங்கள் பெரிய கவனம் பெறும்.
இந்நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜூலை 21ம் தேதி ஓப்பன்ஹெய்மர் படம் வெளியாகிறது. இந்த படத்தில் நடிகர் சிலியன் மர்பி, ராபர்ட் டெளினி ஜூனியர், எமிலி பிளன்ட், மேட் டேமன் உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டமே நடந்துள்ளது.
மேலும் இந்த படம் இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு தயாரிக்க உதவிய அமெரிக்க இயற்பியலாளர் ஜே.ராபர்ட் ஒப்பன்ஹெய்மரை மையமாக வைத்து படம் இயக்கியுள்ளார் கிறிஸ்டோபர் நோலன்.
இப்படத்தில் வரும் அணுகுண்டு வெடிப்பு காட்சியில் கிராப்கிஸ் பயன்படுத்தவில்லை. பாலைவனத்தில் அணுகுண்டு வெடிப்பு காட்சியை நிஜமாகவே எடுத்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓப்பன்ஹெய்மர் படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் எடுக்கவில்லை என இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறியுள்ளார். அதோடு அணுகுண்டு வெடிப்பது போன்ற காட்சியில் கூட கிராபிக்ஸ் பயன்படுத்த வில்லை என தெரிவித்துள்ளார். இதையடுத்து இது எப்படிச் சாத்தியமானது என பலரும் விவாதித்து வருகின்றனர்.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!