Cinema
சூடு பிடித்த நிலத்தகராறு.. பிரபல நடிகையின் தலை உடைத்த பெண்.. போலிசார் தீவிர விசாரணை ! - பின்னணி என்ன?
கன்னடத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் அனு கவுடா. 42 வயதான இவர் நடிப்பில் ஆர்வம் காட்டி தற்போது வரை நடித்து வருகிறார். சிஷ்யா, ஹுடுகரு, குரு, பஜ்ரங்கி, கெம்பேகவுடா என சில கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்த இவர், அவ்வப்போது சில சீரியல்களிலும் தோன்றியுள்ளார்
இந்த சூழலில் தற்போது பெங்களுருவில் வசிக்கும் இவர்க்கு தனது சொந்த ஊரான ஷிவமொகாவின் ஒசநகரில் என்று சொந்தமாக நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. சாகர் தாலுகா கஸ்பாடி கிராமத்தில் இருக்கும் இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை இவர் பெற்றோர் கவனித்து வருகின்றனர். இதனால் இவரும் தனது வேலையில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் அனு கவுடாவின் பெற்றோருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் நீலம்மா, மோகன் ஆகியோருக்கும் இடையே இந்த நிலம் குறித்து பிரச்னை எழுந்துள்ளது. தொடர்ந்து இந்த பிரச்சனை பெரிதாகவே, அனு கவுடா பெங்களுருவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது பெற்றோரிடம் தகராறு செய்த நீலம்மா, மோகனை சந்தித்து இவர் பேசியுள்ளார்.
இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறவே, நீலம்மாவும், மோகனும் சேர்ந்து அனுவை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனுவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அனு சாகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட அனு இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நீலம்மா, மோகனை காவல் நிலையம் அழைத்து விசாரித்து வருகின்றனர். நிலத்தகராறு காரணமாக பிரபல கன்னட நடிகை அனு கவுடா கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!