Cinema
5 மொழிகளில்.. 3 கதாநாயகிகள்.. பெரிய பட்ஜெட்.. ஜெயம் ரவியின் 32-வது படத்தின் மாஸ் Update வெளியீடு !
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் ரவி. 'ஜெயம்' படத்தில் அறிமுகமாகி மாபெரும் ஹிட் கொடுத்ததால், இவரது பெயர் தற்போது ஜெயம் ரவி என்றே அறியப்படுகிறது. இவர் நடித்த படங்கள் பல ஹிட் கொடுத்தாலும், அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் பொன்னியின் செல்வனாக நடித்த கதாபாத்திரம் இவருக்கு ஒட்டுமொத்த உலக அளவிலும் பெரிய பெயரை ஈட்டியுள்ளது.
இந்த நிலையில் இவர் தற்போது இறைவன், ஜெயம் ரவி 30, சைரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவரது 32-வது படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவரது 32-வது படத்துக்கு 'ஜீனி' (Genie) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜெயம் ரவியின் 32-வது படமான இந்த படத்தை , மிஷ்கினின் அசிஸ்டெண்ட் அர்ஜுனன் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் மலையாளத்தில் இருந்து கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இருந்து கிருத்தி ஷெட்டி, பாலிவுட்டில் இருந்து கபி வாமிகா ஆகிய 3 பேர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் (பான் இந்தியா) படமாக உருவாகும் இது சுமார் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. இது படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் பெரும் ஆவலில் உள்ளனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!