Cinema
பிறந்தநாளில் அதிர்ச்சி ! “சினிமாவில் இருந்து விலகப்போகிறாரா?” - வெளியான செய்திக்கு நடிகை காஜல் விளக்கம் !
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு இந்தி படம் ஒன்றின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கு திரையுலகில் கால் பதித்த இவர், 2008-ல் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இருப்பினும் தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்த இவர், ராஜமெளலி இயக்கத்தில் 2009-ல் வெளியான 'மகதீரா' (மாவீரன்) படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த திரையுலையும் கவர்ந்தார்.
இந்த படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் பெரும்பாலும் இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனாலே இவர் தென்னிந்திய நடிகையாக கருதப்படுகிறார்.
தமிழில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இந்த ஆல் அழகுராஜா, விஜயுடன் துப்பாக்கி, மெர்சல், ஜில்லா, தனுஷுடன் மாறி, சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், என தமிழ் முன்னணி நடிகர்களுடன் பல படங்கள் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர்., மகேஷ் பாபு என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் நடித்து வரும் இவருக்கு, திருமணமாகி அண்மையில் குழந்தையும் பிறந்தது. தொடர்ந்து இவர் தென்னிந்திய படங்களில் மட்டுமே நடித்து வரும் நிலையில், தற்போது தமிழில் 2 படங்களும், இந்தியில் ஒரு படமும் கைவசம் வைத்திருக்கும் நிலையில், இவர் திரைத்துறையில் இருந்து விலகப்போவதாக அண்மையில் செய்திகள் வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்த நிலையில், இந்த செய்திக்கு நடிகை காஜல் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "சினிமாவில் இருந்து நான் ஒருபோதும் விலக மாட்டேன். ரசிகர்கள் மீது எனக்கு இருக்கும் அதிக அன்பை எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனது தொழிலும், குடும்ப வாழ்க்கையும் தனித்தனியாகவே இருக்கிறது; அது எப்போதும் தொடரும்." என்றார். இந்த செய்தியை தொடர்ந்து ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகை காஜல் நாளை தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு அவரது 61-வது படமான 'சத்யபாமா' திரைப்படத்தின் டைட்டில் கிளிம்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு படமான இதனை அகில் தேக்கலா (Akhil Degala) இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து விஜயின் 68-வது படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த மாற்றுக் கட்சியினர்! : முழு விவரம் உள்ளே!
-
சுப்ரியா சாகு IAS-க்கு ‘Champions Of The Earth’ விருது: “தமிழ்நாடு பெருமை கொள்கிறது!” - முதலமைச்சர்!
-
“இவர்களது நியாயங்கள், மாநிலத்துக்கு மாநிலம் மாறுகின்றன!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
14 வது ஆடவர் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை 2025 நிறைவு! : பதக்கம் வென்றது ஜெர்மனி!
-
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்: “நீதிபதி GR சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்..” - தொல்.திருமாவளவன்!