Cinema
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை ரோஜா.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !
தமிழில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் ரோஜா. ஆந்திராவை சேர்ந்த இவர், தமிழில் செம்பருத்தியில் தொடங்கிய இவரது திரைப்பயணம், அப்போதுள்ள முக்கிய முன்னணி நடிகர்களுடன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படங்களில் நடித்து வந்தார்.
தொடர்ந்து டிவி சீரியல்களிலும் நடித்து வந்த இவர், திரைப்படங்களில் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்தார். இதனிடையே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்த இவர், 2004, 2009-ல் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அதில் தோற்ற இவர், அடுத்ததாக YSRCP கட்சியில் சேர்ந்து 2014 தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர் 2019-ல் நடைபெற்ற அம்மாநில தேர்தலில் YSRCP கட்சி வெற்றிபெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். அப்போது, ஜென்மோகன் ரெட்டியின் அமைச்சரவை இரண்டு ஆண்டுகளில் மாற்றி அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரோஜா உட்பட புதிதாக 25 பேர் அமைச்சர் பதவிகாலை ஏற்றுக் கொண்டனர். அதில் நடிகை ரோஜாவுக்கு சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டது.
தற்போது அமைச்சராக தனது பணியை சிறப்பாக செய்து வரும் இவர், அண்மைக்காலமாக கால் வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த சூழலில் இவருக்கு கால் வலி அதிகமானதால் சென்னையில் கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கால் வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் ரோஜா விரைந்து குணமாக ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்தை விமர்சையாக பாராட்டினார். இதில் கோபம் கொண்ட ரோஜா, ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்தார். இதனால் தென்னிந்திய திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!