Cinema
தூக்கத்திலேயே பிரிந்த உயிர்.. பிரபல பழம்பெரும் தமிழ் நடிகை திடீர் மறைவு.. சோகத்தில் திரையுலகம் !
அண்மைக்காலமாக திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள், நடிகைகள் உயிரிழந்து வரும் செய்திகள் அதிகம் வெளிவந்த வண்ணமாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட உடல்நலக்குறைவால் நடிகர் மனோபாலா காலமானார். இந்த சூழலில் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. தொடர்ந்து சில படங்களில் சைடு ரோலில் நடித்து பிரபலமான இவர், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். வெள்ளித் திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் அடியெடுத்து வைத்த இவர், சுமார் 45-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.
சில தொடர்களில் நெகட்டிவ் கதாபத்திரத்திலும் நடித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான 'பாரதி கண்ணம்மா- 1'-ல் கண்ணம்மாவுக்கு பாட்டியாக நடித்து ஒரு கலக்கு கலக்கினார். சாகும் வரை நடிப்பதே தனது ஆசை என்று கொண்ட இவர், இறுதியாக பாரதி கண்ணம்மாவில் நடித்து பிரபலமும் வரவேற்பும் பெற்றார். தொடர்ந்து சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும், இவரது உடல்நிலை சூழ்நிலை காரணமாக நடிக்க முடியாமல் போயுள்ளது.
தற்போது 70 வயதாகும் இவருக்கு சுகர் இருந்துள்ளது. இதனால் அண்மைக்காலமாக இவர் உடல்நிலை மோசமான நிலையில் இருந்துள்ளார். இதற்காக தொடர்ந்து சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று காலை தூக்கத்திலேயே மரணமடைந்தார். இவரது மறைவு தற்போது திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்றே இவரது குடும்பத்தார் இறுதி சடங்குகளை செய்து முடித்த நிலையில், நேற்றும் இன்றும் சின்னத்திரை வெள்ளித்திரை என பிரபலங்கள் நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!
-
தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பு : வரம்பு மீறிய காவல்துறை... நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வாதம்!