Cinema
மாஸ் எண்ட்ரி கொடுத்த ரஜினிகாந்த்.. ஜெயிலர் படத்தின் வெளியீட்டு நாள் அறிவிப்பு !
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜயின் 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சன், ரஜினியை வைத்து படத்தை இயக்குகிறார்.
ரஜினியின் 169-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. கடந்த ஆண்டு தலைவர் 169 அறிவிப்பு வெளியான நிலையில், இந்த படத்துக்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினி 80'ஸ் லுக்கிலும் வருகிறார். மேலும் ரஜினியுடன் கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், தமன்னா, ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு என பலரும் நடித்து வருகின்றனர்.
தீவிரமாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அவ்வப்போது இந்த படத்தில் சில காட்சிகள் குறித்து புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், இதன் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த படத்தின் வெளியீட்டு தேதியும் எப்போது என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதன் வெளியீட்டு தேதி விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!