Cinema
“காத்திருக்க முடியாது.. இதுக்காக அங்கிருந்து கிளம்பி வந்தேன்”-PS2 படத்தை காணவந்த ஜப்பான் ரசிகை நெகிழ்ச்சி
தமிழில் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி வெளியான திரைப்படம்தான் 'பொன்னியின் செல்வன் 1'. உலகளவில் பல்வேறு மொழிகளில் வெளியாகிய இந்த படம் இந்தியாவில் பான் இந்தியா படமாக வெளியானது.
ஏ.ஆர். ரகுமான் இசையில் வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, ரகுமான், பார்த்திபன் என்று திரைபட்டாளமே நடித்துள்ளது.
பிரபல தமிழ் எழுத்தாளரான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலில் இருந்து உருவான இந்த கதையை, தமிழில் எம்.ஜி.ஆர்., கமல்ஹாசன் என பல திரை கலைஞர்கள் படமாக எடுக்க முயன்றனர். இந்த நிலையில் நீண்ட விடா முயற்சிக்கு பிறகு மணிரத்னம் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வெளியாகி சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்கில் வெற்றிநடைபோட்டது.
சுமார் 500 கோடிக்கும் மேலாக வசூல் சாதனையை படைத்து கடந்த ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக திகழ்ந்தது. இதன் 2-ம் பாகம் கடந்த 28-ம் தேதி திரையரங்கில் வெளியானது. வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் வெளியான இந்த படம் வெளியான 2 நாட்களிலே 200 கோடிக்கும் மேலாக வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை காண ஜப்பானில் இருந்து ரசிகை ஒருவர் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் தெருமி ககுபரி ஃபுயுஜிடா (Terumi Kakubari Fujieda). இவர் தமிழ்நாட்டிற்கு வேலை நிமித்தமாக வந்துள்ளார். அப்போது இங்கே கார்த்தி படத்தை பார்த்துள்ளார். அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் 1-ம் பாகத்தை கண்டுள்ளார்.
அது அவருக்கு மிகவும் பிடித்து போக, இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்த நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் இந்த படம் வெளியானது. இந்த சூழலில் இந்த படத்தை காண ஜப்பான் நாட்டில் இருந்து இந்த ரசிகை இந்தியாவுக்கு வந்து பார்த்துள்ளார். அவரை நடிகர் கார்த்தி தனது வீட்டுக்கு உபசரித்து உணவு பரிமாறி மகிழ்ந்தார்.
இந்த நெகிழ்ச்சி நிகழ்வு குறித்து ரசிகை Terumi Kakubari Fujieda கூறுகையில், “நான் வேலை நிமித்தமாக சில காலம் இந்தியாவில் தங்கியிருந்தேன், அப்போது பொன்னியின் செல்வன் 1-ம் பாகம் பார்த்தேன். அதனை புரிந்து கொள்ள கடினமாக இருந்தாலும், அதில் கார்த்தியின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. அன்றிலிருந்து அவரது தீவிர ரசிகையானேன்.
இதன் இரண்டாம் பாகம் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது எனக்கு தெரியும். இந்த படம் ஜப்பானில் வெளியாக சில நாட்கள் ஆகும். எனவே அதுவரை காத்திருக்க முடியாது என்று உடனே சென்னை கிளம்பி வந்தேன். இந்த படம் மிகவும் அருமையாக இருந்தது. கண்டிப்பாக ஜப்பான் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும்" என்றார்.
Also Read
-
87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை தொடக்கம்! - முழு விவரம் உள்ளே!
-
கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா! : மும்முரமாக நடைபெறும் பணிகள்!
-
“இளைஞர்களின் கைகளுக்கு இந்த ஆவணத்தைக் கொண்டு சேர்ப்பீர்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
தமிழ்நாடு முழுவதும் 16,248 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 6,78,034 பேர் பயன்!” : அமைச்சர் மா.சு தகவல்!
-
“ஆணவத்தால், திமிரால், அளவுக்கு மீறிய தான்தோன்றித் தனத்தால் தோற்றவர் பழனிசாமி” : முரசொலி கடும் விமர்சனம்!