Cinema
#AK52-ல் வெளியாகும் #AK62 டைட்டில்.. இணையத்தில் ட்ரெண்டாகும் அஜித் படத்தின் மாஸ் Update !
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் துணிவு. எச்.வினோத் இயக்கிய இந்த படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் திரையரங்கில் வெளியானது. விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் நேருக்கு நேர் மோதிய நிலையில், துணிவு முதல் நாள் வசூல் உலகளவில் சுமார் ரூ.30 கோடியை தாண்டியது.
இதனிடையே துணிவு படத்தின் பணியின்போதே அஜித்தின் அடுத்த படமான AK62 திரைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி லைகா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது. துணிவு படத்தின் நிறைவு பணிகளுக்கு பிறகு AK 62 படத்தின் அப்டேட்டின்படி அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவுக்கு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் திரிஷா அதன்பிறகு சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதால், இதுகுறித்து நடிகை காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல முன்னணி நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளதாகவும், இதில் நடிகர் சந்தானமும் இணைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி, அதற்கு பதில் மகிழ் திருமேனி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து விக்னேஷ் சிவன் வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், AK 62 படத்தின் இயக்குநர் குறித்த எந்த தகவல்களும் தெரியவரவில்லை. எனினும் இதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலில் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், நாளை (மே 1) நடிகர் அஜித் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது திரை பிரபலங்களின் பிறந்தநாளின் போது அவர்கள் படத்தின் மாஸ் அப்டேட் வெளியாகும் நிலையில், நாளை அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ak 62 படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிடுவர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.
இதனால் இணையத்தில் அஜித் ரசிகர்கள் #AK52 #AK62 #Ajithkumar உள்ளிட்டவையை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அஜித்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கேக் வெட்டி, அன்னதானம், இரத்த தானம், வெடி வெடித்து என கோலாகலமாக கொண்டாடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அருவருக்கத்தக்க பேச்சு.. திமுக பெண் MP-க்கள் முதல் திரிஷா வரை.. நயினார் நாகேந்திரனுக்கு குவியும் கண்டனம்!
-
“உயர்கல்வித்துறை சார்பில் ரூ.542.02 கோடியில் புதிதாக 15 கட்டடங்கள் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
விறுவிறுப்பாய் நடந்த இந்தியா - பாக். போட்டி: தொடர் வெற்றி மூலம் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்த இந்தியா!
-
நகர மக்களுக்காக 16 உழவர் அங்காடிகள்; 672 வேளாண் இயந்திரங்கள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.5,980 கோடி முதலீட்டில் 8,400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு! : இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!