Cinema

“திரையுலகின் பெருமை.. இரண்டாவது பாகத்திற்கு ஆவல்..” - ‘விடுதலை’ படத்துக்கு புகழாரம் சூட்டிய ரஜினிகாந்த் !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 31-ம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இது நடிகர் சூரி முதல் முறை கதாநாயகனாக நடிக்கும் படமாகும். சூரி இந்த படத்தில் எப்படி நடிப்பாரோ என்று ரசிகர்கள் யோசித்து வைத்திருந்த நிலையில், அவர்களுக்கு பெரிய அளவு திருப்தி அளிக்கும் வகையில் அவரது நடிப்பு இருக்கிறது.

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூரி தனது வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வெற்றியின் மூலமே சூரி இனி காமெடி வேடங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த படத்தின் நடித்த நடிகர்கள் நடிகைகள் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்து வருகின்றனர். இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நல்ல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ரிஸ்கர்கள் மட்டுமின்றி, அரசியல்வாதிகளும், திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு 'ஏ' தணிக்கை சான்றிதழ் கொடுக்க பட்டாலும், திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே கணப்படுகிறது.

அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் "இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" என்று விடுதலை படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். அதோடு இந்த படம் வெற்றிமாறனை விட சூரிக்கு ஒரு பெரிய நல்ல தொடக்கமாகவே அமைந்துள்ளது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் விடுதலை படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் படக்குழுவை தனது சமூக வலைதளம் வாயிலாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "விடுதலை.. இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். சூரியின் நடிப்பு - பிரமிப்பு; இளையராஜா - இசையில் என்றும் ராஜா; வெற்றிமாறன் - தமிழ்த் திரையுலகின் பெருமை; தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துகள். இரண்டாவது பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கு மிகவும் மோசம்".. இயக்குநர் பா.இரஞ்சித் கண்டனம்!