Cinema
700 படங்கள்.. பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.. கண்ணீரில் இந்திய சினிமா உலகம்!
மலையாள சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகத் திகழ்ந்தவர் இன்னசென்ட். இவர் மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.அதோடு பாடகர், தயாரிப்பாளராகவும் சினிமாவிற்கு தனது மற்றொரு பங்களிப்பைச் செய்துள்ளார். இவரது நடிப்பிற்கு மூன்று முறை மாநில அரசு விருது கிடைத்துள்ளது.
இந்நிலையில் நடிகர் இன்னசென்ட் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் நிலை தொடர்ந்து மோசமாகவே இருந்து வந்தது.இதையடுத்து புற்றுநோய் தீவிரமடைந்ததால் நேற்று நடிகர் இன்னசென்ட் காலமானார்.
வரது மறைவுக்குக் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கள் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சக நடிகர்கள் என இந்திய சினிமா உலகமே இரங்கல் தெரிவித்து வருகிறது.
நடிகர் இன்னசென்ட் 2012ம் ஆண்டு புற்றுநோயால் பாதித்து அதிலிருந்து மீண்டுவந்தார். தனது அனுபவம் குறித்து புத்தகம் ஒன்றையும் இவர் எழுதினார். இந்த புத்தகம் புற்றுநோயால் பாதித்தவர்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டி வருகிறது. தற்போது மீண்டும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!