Cinema
ஹோட்டல் அறையில் பிணமாக கிடந்த இளம் நடிகை: கொலையா? தற்கொலையா?- மரணத்திற்கு முன் போட்ட வீடியோவால் குழப்பம்!
கடந்த 1997-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி அன்று உத்தப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் பிறந்த நடிகை அகன்ஷா துபே டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர். அதனைத் தொடர்ந்து இன்ஸ்டாவின் வீடியோகளை பதிவிட்டு வந்த அவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 1.7 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள்.
16 வயதிலேயே மாடலாக அறிமுகமான இவர், 17 வயதில் 'மேரி ஜங் மேரா ஃபைஸ்லா' என்ற போஜ்புரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'முஜ்சே ஷாதி கரோகி', 'வீரோன் கே வீர்', 'ஃபைட்டர் கிங்' உள்பட பல போஜ்புரி படங்களில் நடத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவர் தற்போது மற்றொரு போஜ்புரி படத்தில் நடித்துவந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த இவர் படப்பிடிப்பு முடிந்ததும் தனது அறைக்கு சென்றுள்ளார்.
நேற்று இரவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகன்ஷா போஜ்புரி பாடலுக்கு ஆடி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து காலை நெருநேரம் ஆகியும் அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். ஆனால் பதில் வராததால் மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்து பார்த்தபோது தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் வந்து சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறப்பதற்கு சில நிமிட நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் நேரலையில் வந்த அகன்ஷா கதறி அழுதுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிஸார் தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!