Cinema

'இளையநிலா பொழிகிறதே'.. பாடலுக்கு கிடார் இசைத்த பிரபல கலைஞர் மரணம்.. இளையராஜா உள்ளிட்ட பலர் இரங்கல்!

தமிழ் திரைப்பட உலகிற்கு இந்த ஆண்டு ஒரு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் நடிகர் ராமதாஸ், சண்டை பயிற்சியாளர் ஜூடோ ரத்னம், பழம்பெரும் நடிகை ஜமுனா, இயக்குநர் ஷண்முகப்பிரியன், நெல்லை தங்கராஜ், பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாதன், பாடகி வாணி ஜெயராம், இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் மயில்சாமி என 8 சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்பு திரைப்பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்கும் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் பல பாடல்களுக்கு கிடார் வாசித்த இசைக் கலைஞர் ஆர். சந்திரசேகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இன்றும் ரசிகர்களின் இதயங்களில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கும் 'இளையநிலா பொழிகிறதே' பாடலுக்குக் கிட்டார் வாசித்தது ஆர். சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தபோடலை கேட்கும் எல்லோரும் அந்த கிட்டார் இசையை அம்மிங் செய்யாமல் இருக்கவேமாட்டார்கள். அந்த அளவிற்குக் கிட்டார் இசை அவர்களை கவர்ந்து விடும்.

இப்படி தனது கிட்டார் இசையால் புகழ்பெற்ற இவர் இளையராஜா மட்டுமல்லாது, இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர்-கணேஷ், திவாகர் ஆகியோர் இசைக்குழுவிலும் கிடாரிஸ்டாக பணியாற்றியுள்ளார். இந்த இசை ஜாம்பவான்கள் மூலம்0 தமிழ் சினாவில் பல படங்களுக்கு கிடாரிஸ்டாக ஆர்.சந்திரசேகர் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இசைஞானி இளையராஜாவும் சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"என்னுடன் பணியாற்றிய, எனக்கு மிகப் பிரியமான இசைக் கலைஞரான சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். நாங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள். நிறையப் பாடல்களுக்கு அவர் வாசித்திருக்கிறார். கிடார் போன்ற இசைக்கருவிகள் மூலம் மக்கள் நெஞ்சில் நீங்காத இடம் பெற்று இருக்கிறார்" என தெரிவித்துள்ளார். இப்படி பலரும் ஆர்.சந்திரசேகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Also Read: பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி!