Cinema
”மூணு கடல் கூடும் குமரி கண்டத்துல”.. தெறிக்கவிடும் லுக்கில் சிலம்பரசனின் ’பத்து தல’ பட டீசர் வெளியானது !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர்களில் முக்கியமானவர் நடிகர் சிலம்பரசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி திரையுலகில் அறிமுகமான இவர் லிட்டில் சூப்பர் ஸ்டார் பட்டம் பெற்றார். அதன்பிறகு காதல் அழிவதில்லை படத்தில் இளைஞராக அறிமுகமான இவர், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக, பாடகராக, பாடலாசியராக, தயாரிப்பாளராக பன்முகத் தன்மை கொண்டவராக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மாநாடு, வெந்து தனிந்தது காடு உள்ளிட்ட படங்கள் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
தற்போது 'பத்து தல' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஓபிலி என். கிருஷ்ணா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதையடுத்து கடந்த மாதம் இந்த படத்தின் முதல் பாடலான 'நம்ம சத்தம்' என்ற பாடல் வெளியானது. தற்போது வரை சுமார் 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்த இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் இந்த மாதம் (மார்ச்) வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
இதனால் இந்த படத்தின் ஆடியோ லான்ச், டீசர் மற்றும் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இதன் டீசர் 03.03.2023 மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு கூறினர்.
இந்த நிலையில் தற்போது இதன் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டீசரில் மிரட்டலான கெட்டப்பில் காட்சிதரும் சிம்பு, ஒரு கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரியவருகிறது.
Also Read
-
அரசாணை வெளியிடுவது.. திரும்பப் பெறுவது.. repeat! : த.வெ.க அரசுக்கு எழும் கண்டனங்கள்!
-
16 ஆண்டுகளாக வழங்கிவந்த ‘முட்டைகள்’ தவெக ஆட்சியில் நிறுத்தம்! - முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் கண்டனம்!
-
சட்டம், ஒழுங்கு தகவல்கள் RTI கீழ் விலக்கு.. கடும் எதிர்ப்பு கிளம்பியதும் U-Turn அடித்த தவெக அரசு!
-
“அதிமுக MLA-களை Whole Sale-ல் வாங்கும் தவெக.. திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
-
பல்லிளிக்கும் தவெக அரசு.. அமைச்சர் நிர்மல்குமார் நிகழ்வில் மின் தடை.. அமைச்சர், மின்துறை இரட்டை விளக்கம்!