Cinema
பிரபல மலையாள காமெடி நடிகை திடீர் மரணம்.. சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி!
2006ம் ஆண்டு ராஜசேனன் இயக்கத்தில் வெளிவந்த 'கனக சிம்ஹாசனம்' படத்தின் மூலம் மலையாள சினாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆனவர் சுபி சுரேஷ். இந்த படத்தை அடுத்து 'எல்சம்மா என்ற ஆண்குட்டி', 'பஞ்சவர்ண தத்தை', 'டிராம' என 20க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மேலும் படங்களில் நடிப்பதுடன் சேர்ந்து தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் சுபி சுரேஷ் இருந்து வந்துள்ளார். அதோடு வெளிநாடுகளில் பல மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி இன்னும் பிரபலம் அடைந்தார் சுபி சுரேஷ். இந்நிலையில் இவருக்குக் கல்லீரலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஆலுவாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.
இங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து கொச்சியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி நடிகை சுபி சுரேஷ் உயிரிழந்துள்ளார். இத்தகவலை அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இவரின் இறப்புச் செய்தியை அறிந்து சக நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?