Cinema

சொந்த நிலத்தை கேரள அரசுக்கு வழங்கிய பத்ம விருது பெற்ற இயக்குநர்.. யார் இந்த அடூர் கோபாலகிருஷ்ணன் ?

மலையாளத்தில் கடந்த 1972-ம் ஆண்டு 'சுயம்வரம்' என்றப் படத்தின் மூலம் அரிமானவர்தான் இயக்குநர் அடூர் பாலகிருஷ்ணன். முன்னதாக ஷார்ட் பிலிம், டாக்குமென்டரியை இயக்கிய இவர், திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் தனது முதல் படத்திலேயே பெரும் பாராட்டுகளை குவித்த இவர், மாஸ்கோ சர்வதேச திரைப்பட விருதை பெற்றார்.

தனது முதல் படத்திலேயே அனைவர் மத்தியிலும் கவனம் ஈர்த்த அடூர் பாலகிருஷ்ணன், அதே படத்திற்காக சிறந்தப் படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு என்னும் 4 பிரிவுகளில் தேசிய விருதுகளையும் பெற்றார்.

அதன்பிறகு மீண்டும் ஆவணப்படம் இயக்குவதில் ஆர்வம் காட்டிய இவர், 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படத்தை இயக்கினார். 1977-ல் வெளியான 'கொடியேட்டம்' படம் மீண்டும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் என்ற பிரிவில் இந்த படம் தேசிய விருது பெற்றது.

அதன்பிறகு இவர் இயக்கத்தில் வெளியான எலிப்பாதாயம், மதிலுகள், விதயன், அனந்தரம், காதபுருசன் என உள்ளிட்ட படங்களுக்கும் விருதுகள் அள்ளி குவிந்தன. இருப்பினும் தனது ஆவணம் மற்றும் குறும்படங்கள் எடுப்பதை அவர் கைவிடவில்லை. இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் 'பின்னேயம்'. திலீப், காவியா மாதவன் நடிப்பில் வெளியான இப்படம் கடந்த 2016-ல் வெளியானது.

தற்போது 80 வயதாகும் அடூர் கோபாலகிருஷ்ணன், மலையாள திரையுலகில் மூத்த இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் திரைத்துறையில் இதுவரை 16 தேசிய விருதுகள், 17 கேரள மாநில விருதுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருத்தையும் பெற்றுள்ளார்.

அதோடு இவரது படைப்புகளை கெளரவிக்கும் விதமாக 1984-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றார். மேலும் 006-ம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் பெற்றார். தற்போது திரைதுரையில் இருந்து சற்று விலகி இருக்கும் இவர், பொது சேவையை செய்து வருகிறார்.

இந்த நிலையில், இவர் தனக்கு சொந்தமான நிலத்தை கேரள அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். வீடற்ற ஏழை மக்களுக்காக வீடு கட்டித் தரும் திட்டத்தை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முன்னெடுத்துள்ளது. கேரள அரசு அறிமுகப்படுத்தியுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தருவதற்காக, 'மனசோதித்திரி மண்ணு' என்றப் பெயரில் இதற்கான பிரச்சாரத்தையும் கேரள அரசு தொடங்கியுள்ளது.

இதற்காக சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களால் முடிந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன், கேரள மாநிலம் துவாயூர் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக நிலமான 13.5 சென்ட் நிலத்தை கேரள அரசுக்கு தானமாக வழங்கியுள்ளார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார்.

எனவே மும்பையில் இருக்கும் தனது மகளிடம் கலந்து ஆலோசித்த பிறகு தனது நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அடூர் கோபாலகிருஷ்ணனின் இந்த முடிவு பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்று வருகிறது. மேலும் இவரே அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த தகவலை கூறியுள்ளார். இதற்கு அமைச்சர், அடூர் கோபாலகிருஷ்ணன் வீட்டிற்கே வந்து நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: “அனைவரையும் திருப்தி படுத்தக்கூடிய படைப்பு என்ற ஒன்று இல்லை” -மைக்கேல் பட விமர்சனத்துக்கு இயக்குநர் பதில்