Cinema
Fashion Show-வுக்கு தயாராக இருக்கும் சன்னி லியோன்.. திடீரென்று வெடித்த வெடிகுண்டு.. ரசிகர்கள் அதிர்ச்சி !
இந்திய திரையுலகில் நீங்கா இடம்பிடித்தவர் சன்னி லியோன். இந்தி மொழிகளில் தொடங்கிய இவரது திரைப்பயணம், தமிழிலும் தொடர்ந்துள்ளது. தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான 'வடகறி' படத்தில் ஒரு பாடல் ஒன்றிற்கு நடனமாடினார்.
அதன்பிறகு தமிழில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'ஓ மை கோஸ்ட்' படத்தில் பேயாக நடித்து ரசிகர்கள் மனதை மேலும் கவர்ந்தார். முன்னிலை கதாபாத்திரத்திலும் நடித்து வரும் இவர், சொந்தமாக பியூட்டி பொருட்கள் விற்கும் தொழிலும் செய்து வருகிறார். மேலும் மாடலாகவும் இருந்து வரும் இவர், அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
அதன்படி நடிகை சன்னி லியோன் மணிப்பூரில் உள்ள இம்பாலில் நாளை நடைபெறும் ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார். அதற்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து நாளை நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்காக அதற்கான அரங்கு அமைக்கும் பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் கலந்துகொள்ள இருக்கும் ஃபேஷன் ஷோ நடைபெறும் பகுதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் இன்று காலை சுமார் 6.30 மணி அளவில் திடீரென குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டது.
அவர்கள் வந்து சோதனை செய்தபோது, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதோடு இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் கையெறி குண்டு எறிந்துள்ளது தெரியவந்துள்ளது. சன்னி லியோன் பங்கேற்கவிருக்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அருகே குண்டு வெடிப்பு நடத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!
-
திராவிட மாடலில் உழவர்கள் பெற்ற நலன்! : வேளாண் திட்டங்களை பட்டியலிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!
-
112 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு : ஒன்றிய அரசின் அதிர்ச்சி தகவல்!
-
பீகார் தேர்தல் : இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் யார்? - வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!