Cinema
காவிகளின் எதிர்ப்பை தூக்கி சாப்பிட்ட ‘பதான்’.. ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா ? - கொண்டாட்டத்தில் பாலிவுட்!
பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகும் இந்த படம் நேற்று வெளியாகியது.
திரையரங்கில் வெளியாகிய இந்த படத்திற்காக ஷாருக் ரசிகர்கள்வழிமேல் விழிவைத்து காத்திருந்த நிலையில், நேற்று இதனை உற்சாகமாக கொண்டாடி வந்தனர். இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சை பேச்சுகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் உள்ளாகியது.
அதாவது, இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது.
ஏனெனில் இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர். அதோடு ஷாருக், தீபிகா உருவப்படம் எரிப்பு, சேர்ப்பு மாலை உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்களில் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.
இப்படி தொடர் போராட்டங்கள் இருந்த போதிலும், அதனை கண்டுகொள்ளாத படக்குழு அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியிட்டது. இப்படி இருக்கையில் படம் வெளியாவதற்கு இரண்டு நாட்கள் முன்பு அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த் பிஸ்வாஸ், ஷாருக்கான் யார் என்றே தனக்கு தெரியாது என்றும், இந்த விவகாரம் குறித்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து மறுநாள் ஷாருக், ஹிமாந்த் பிஸ்வாஸை தொடர்பு கொண்டு பதான் பட எதிர்ப்புகளை பற்றி பேசியதாக பிஸ்வாஸே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். பல தடைகளையும், எதிர்ப்புகளையும் மீறி நேற்று உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் 8,000 ஸ்க்ரீன்களிலும், அதில் இந்தியாவில் 5,500 ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வெளியான இந்த படம் நேற்று ஒரு நாள் மட்டுமே ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. பல ஆண்டுகளுக்கு பாலிவுட் படம் வெளியீடு அன்று Boycott இல்லாமல் வெளியான மாஸ் ஹீரோ படமாக இந்த படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் கீழே இறங்கி இருந்த பாலிவுட் திரையுலகை இந்த படம் மீண்டும் மேலே தூக்கி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!