Cinema
டிக்கெட்டை ஸ்டேட்டஸில் வைத்த ரசிகர்: துணிவை தொடர்ந்து வாரிசு டிக்கெட் திருட்டு.. திருத்தணியில் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு டிக்கெட் எடுத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த படங்களின் முதல் காட்சிக்கு ஆன்லைனில் டிக்கெட் ஓபன் ஆன சில மணி நேரங்களிலேயே முழுவதுமாக தீர்ந்து விட்டது. சில ரசிகர்கள் டிக்கெட் இல்லாமல் அவதிபட்டும் வருகின்றனர்.
நேற்றைய முன்தினம் வேலூரிலுள்ள காகிதப்பட்டறையில் அஜித் ரசிகர் மன்ற அலுவலகத்தில் துணிவு 900 முன்பதிவு டிக்கெட்டுகள் திருட்டு போய்விட்டது. விற்பனைசெய்யப்பட்ட டிக்கெட்களுக்கான பணம் சுமார் ரூ. 16,000 திருடுபட்டதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அதே நாளில் துணிவு படத்திற்கான முதல் நாளுக்கான டிக்கெட்டை எடுத்த ரசிகர்கள் ஒருவர், ஆர்வக்கோளாறால் தனது டிக்கெட்டை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். பின்னர் டிக்கெட்டை காட்டி திரையரங்குக்குள் செல்ல முயற்சி செய்தபோதுதான், அந்த டிக்கெட்டில் இருக்கும் QR கோடை பயன்படுத்தி வேறு ஒருவர் படத்தை பார்த்ததாக திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்த நிலையில், தனது டிக்கெட் திருடு போனதை அறிந்தார்.
இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாரிசு படத்திற்கான டிக்கெட்டு திருடப்பட்டுள்ளதாக ரசிகர் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். அதாவது திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள துர்கா திரையரங்கில் படம் பார்ப்பாதற்காக ரசிகர் ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்துள்ளார்.
நேற்று மாலை 6.30 மணி ஷோவுக்கு புக் செய்யப்பட்ட அந்த டிக்கெட்டை தனது வாட்சப்பில் ஸ்டேட்டசாக வைத்துள்ளார். பின்னர் நேற்று மாலை திரையரங்கிற்கு சென்ற அவரிடம், உங்கள் டிக்கெட்டை வேறு ஒருவர் பயன்படுத்தி விட்டதாக திரையரங்கு ஊழியர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ந்த ரசிகர் சோகமாக வீட்டிற்கு சென்றுள்ளார்.
இப்படியாக பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ஆர்வக்கோளாறு காரணமாக தங்கள் டிக்கெட்டை ஸ்டேட்டஸாக வைத்ததால், அது திருடு போய்விடுகிறது. இதனை யார் திருடினார்கள் என்றும் கண்டறிய முடியவில்லை. எனவே ரசிகர்கள் உஷாராக இருக்கும்படி பாதிக்கப்பட்டவர்கள் அறிவுரை கூறி வருகின்றனர். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!