Cinema
“கண்ணீர் விலைமதிப்பற்றது.. #வாரிசு எனது குடும்பம்..” - இசையமைப்பாளர் தமன் போட்ட உருக்கமான பதிவு !
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் 'வாரிசு'. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தில் தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெய சுதா, ஷாம், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்காக ரசிகர்கள் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், தெலுங்கில் வரும் 14-ம் தேதி வெளியாகவுள்ளது; தமிழில் நாளை இப்படம் நேரடியாக திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்த படத்தோடு அஜித்தின் துணிவும் நேரடியாக மோதவுள்ளது.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்ப்பரப்பில் இருக்கும் இந்த படங்களின் ட்ரைலர்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு இந்த படங்களுக்காக ரசிகர்கள் பல விதமாக ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை இரு படங்களது சிறப்பு காட்சிகள் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் நள்ளிரவு 1 மணி காட்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் "வாரிசு திரைப்படத்தின் அனைத்து எமோஷனல் காட்சிக்கும் என் இதயத்தில் இருந்து அழுதேன் அண்ணா. கண்ணீர் விலைமதிப்பற்றது. வாரிசு திரைப்படம் என் குடும்பம் அண்ணா. இது என் இதயத்திற்கு நெருக்கமானது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அண்ணா" என்று குறிப்பிட்டுள்ளார்.
தமனின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பதிவுடன் சேர்ந்து விஜயுடன் தமன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நாளை வெளியாகவிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், திரை விமர்சகர்கள் மத்தியில் எவ்வளவு ரேட்டிங் வருகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!