Cinema
“அவருடன் இருந்த அந்த 8 ஆண்டுகளும் நரகம்..” -சல்மான் கான் குறித்து காட்டமாக பேசிய முன்னாள் காதலி சோமி அலி!
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். மூன்று கான்களில் ஒருவராக இருக்கும் சல்மான்கானுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். வழக்கமாக நடிகர்கள் நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்குவது போல், இவரும் சில நேரங்களில் சிக்குவது உண்டு.
அண்மையில் கூட தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாத இவருக்கும், நடிகை பூஜா ஹெக்டேவுக்கு காதல் இருப்பதாக இணையத்தில் தகவல் ஒன்று உலாவி வருகிறது. இப்படி இருக்கையில் சல்மான் கானுடன் காதல் உறவில் இருந்த நடிகை ஒருவர் அவர் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது பாலிவுட்டில் கிருஷ்ணன் அவதார், அண்டோலன் என சில படங்களில் நடித்தவர்தான் பாகிஸ்தானிய நடிகை சோமி அலி. இவரும், சல்மான் கானும் 1991 முதல் 1999 ம் ஆண்டு வரை சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் சல்மான் கானுடன் இருந்த காதல் உறவு குறித்து நடிகை சோமி அலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மிகவும் காட்டமான
அந்த பதிவில், "சல்மான் கானுடனான அந்த 8 ஆண்டு கால வாழ்க்கை மிகவும் மோசமானவை. ஒரு நாளும் அவர் என்னை அவர் மதித்ததில்லை. என்னை குறைத்து மதிப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பொது இடங்களில் என்னை அவரின் காதலி என அடையாளம் காட்டியதில்லை. நண்பர்களின் மத்தியில் என்னை அவமானப்படுத்துவார். அவர் என்னை நடத்தியதை பொது வெளியில் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
என்னை நன்கு கவனித்து நேசிக்கும் ஒருவரைத் தேடுவது தான் என்னுடைய ஆசை. இந்த ஆண்கள் என்னை பயன்படுத்துகிறார்கள் என்பதை நான் உணரவில்லை. 'நான் ஒரு ஆண்; ஆண்களால் மட்டுமே பெண்களை ஏமாற்ற முடியும்' எனக் கூறி, என் மீது வன்முறையைச் செலுத்தும் தைரியம் அவருக்கு இருந்தது. உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நான் அதிகமான துன்பங்களை அனுபவித்தேன்.
சல்மான் அல்லது வேறு யாரேனும் உங்களிடம் அன்பாக நடந்துகொள்வதால், அவர்கள் மற்றவர்களுடன் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். வாய்மொழி, பாலியல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் ஆகியவற்றின் அடிப்படையில் நான் அதை மிகவும் மோசமாக அனுபவித்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்ட இந்த பதிவு தற்போது திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!