Cinema
“தயவுசெஞ்சு இதுமாதிரி போலி செய்தி போடாதீங்க..” : ‘துணிவு’ பட தயாரிப்பாளர் போனி கபூர் வருத்தம் !
looகடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.
இவனா, பிரதீப் ரங்கநாதன், ரவீனா ரவி, யோகி பாபு, ராதிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். AGS நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளே உலக அளவில் மொத்தம் ரூ.6 கோடியம், தமிழ்நாடு அளவில் ரூ.4 கோடி வசூல் செய்தது.
மூன்று நாட்களிலே கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம் சுமார் ரூ.100 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது. கடந்த ஆண்டில் டாப் தமிழ் படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தெலுங்கில் இது டப்பிங் செய்யப்பட்டு திரையிடப்பட்டது. தெலுங்கு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இப்படம், இளைஞர்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டது.
இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அதில் வருண் தவான் நடிக்கவுள்ளதாகவும், இதனை டேவிட் தவான் இயக்குவார் என்றும் கூறப்பட்டது. மேலும் இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது இவையனைத்தும் வதந்தி எனவும், தான் இந்த படத்தை வாங்கவில்லை எனவும் போனி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட அவர், அதில் "லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை” என குறிப்பிட்டுள்ளார்.
போனி கபூர் தற்போது அஜித்தின் 'துணிவு' படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். முன்னதாக அஜித்தின் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!