Cinema
ரசிகர்களுடன் கிறிஸ்துமஸை கொண்டாட வரும் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப்.. வெளியான போஸ்டரால் உற்சாகம் !
பிட்சா படம் மூலம் தமிழ் சினிமாவில் காதநாயகனாக அறிமுகமானவர்தான் விஜய் சேதுபதி. தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்தார்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தார். தமிழை தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். ஆண்டுதோறும் இவர் நடிப்பில் சுமார் 4 - 5 படங்கள் வெளிவரும். கடந்த ஆண்டு மட்டுமே இவர் நடிப்பில் 7 படங்கள் வெளியானது.
கதாநாயகன் மட்டுமின்றி வில்லன் ரோலிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பிடித்த கதாநாயகன் என்ற இடத்தில் இருந்து பிடித்த வில்லன்களில் ஐவரும் ஒருவராக ரசிகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில் இவர் தற்போது இந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரபல பாலிவுட் இயக்குநரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் 'அந்தாதூன்'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் இவர், அடுத்து இயக்கப்போகும் படம்தான் 'மெரி கிறிஸ்துமஸ்'.
விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நடிக்கிறார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் மூலம், நேரடியாக இந்தி திரையுலகில் விஜய் சேதுபதி அறிமுகமாகிறார்.
இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுகுறித்த சர்ச்சைக்கு இந்த படம் நிச்சயம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்தனர். தொடர்ந்து இப்படம் இந்தாண்டின் கிறிஸ்துமஸுக்கு 2 நாட்கள் முன்பே (23-ம் தேதி) வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சில தொழில்நுட்ப பணிகள் முடியாததாலும் திட்டமிட்ட தேதியில் வேறு படங்கள் திரைக்கு வருவதாலும் தள்ளிவைத்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் நாளை நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்த படத்தின் தொடர்பான போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழுவினர். அந்த போஸ்டரில் 2023-ஆம் ஆண்டு 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து கத்ரினா கைப் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த படத்தை வெளியிட்டு, "இந்த கிறிஸ்துமசுக்கு வெளியிட திட்டமிட்டோம்.. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்.. விரைவில் திரையரங்கில் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
பீகாரில் மகளிர் திட்டத்தில் முறைகேடு : ஆண்களின் வங்கி கணக்தில் வரவு வைக்கப்பட்ட பணம்!
-
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை என்ன? : நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய திமுக எம்.பி!
-
மாதவிடாய் சுகாதாரத் திட்டம் பயன் தருகிறதா? : ஒன்றிய அரசுக்கு தி.மு.க MP கேள்வி!
-
“GST நஷ்டத்திற்கு இழப்பீடு வேண்டும்” : நாடாளுமன்றத்தில் ராஜேஷ்குமார் MP வலியுறுத்தல்!
-
காந்தி பெயரை நீக்கதான் முடியும், இதை உங்களால் சிதைக்க முடியாது : முரசொலி தலையங்கம்!