Cinema
வரதட்சணை கொடுமை : பிரபல நடிகைக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை.. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் !
கன்னட மொழிகளில் பிரபல நடிகையாக இருப்பவர் அபிநயா. 80-களில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர், தற்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அப்போது சிறந்த நடிகைக்கான மாநில அரசின் விருதினை பெற்ற இவர், தற்போது சில சீரியல்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
அபிநயா, தனது தாய் மற்றும் சகோதாருடன் வாழ்ந்து வந்த நிலையில், இவரது சகோதரர் சீனிவாசனுக்கும் லட்சுமி என்ற பெண்ணுக்கும் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு லட்சுமியை குடும்பமே சேர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளனர். மேலும் வரதட்சணை கேட்டும் கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பொறுமை இழந்த லட்சுமி கடந்த 2002-ம் ஆண்டு காவல்நிலையத்தில் அபிநயா, அவரது சகோதரர் சீனிவாசன், தாய் ஜெய்யம்மா, செல்வராஜி, ராமகிருஷ்ணா உட்பட குடும்பத்தார் மீது புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதோடு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது 2012-ம் ஆண்டு நடிகை அபிநயா உள்ளிட்ட இருவருக்கு 2 ஆண்டு சிறைதண்டனையும் சீனிவாஸ் உள்பட 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து அபிநயா தரப்பில் பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரித்த நீதிமன்றம் தண்டனை விதிக்கப்ட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மீண்டும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
அதன்படி பெங்களூரு மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது தாய் ஜெயம்மாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், செல்வராஜிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நடைபெற்று கொண்டிருந்த சமயத்திலேயே லட்சுமியின் கணவர் சீனிவாசன் மற்றும் ராமகிருஷ்ணா இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரதட்சணை கொடுமை செய்வதாக எழுந்த புகாரில் பிரபல கன்னட நடிகை அபிநயாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
சென்னையில் எப்போது மழை நிற்கும்? : வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!