Cinema
'எப்போதும் வலிமையாக இருப்பேன்': உருவ கேலிக்கு பதிலடி கொடுத்த 'பேச்சுலர்' பட நடிகை!
2021ம் ஆண்டு வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை திவ்யபாரதி. இந்த படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். இந்த பட வெற்றியை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படங்கள் அவ்வப்போது வைரலாகும்.
அப்போது எல்லாம் அவரது உடல் குறித்த பலரும் கேலியாகப் பதிவிடுவர். இதைக் கண்டும் காணாமல் இருந்து வந்த நிலையில் தற்போது, தனது உடல் கேலி செய்தவர்களுக்கு நடிகை திவ்யபாரதி பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள பதிவில், " என் உடல் வடிவம் போலியானது, இடுப்புக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என சிலர் கூறுகின்றனர். மேலும் பேண்டா பாட்டில் போன்று இருக்கிறேன் எனவும் கிண்டல் செய்கின்றனர்.
இப்படியான கேலி கிண்டல்களை நான் எனது கல்லூரி காலத்திலிருந்தே சந்தித்து வருகிறேன். அப்போது எல்லாம் என் உடலையே நான் வெறுக்க நினைத்தேன். இயற்கையாகவே என் உடல் அமைப்பு இப்படிதான் உள்ளது. நான் உடற்பயிற்சி கூட செய்து கிடையாது. சக பெண்களே நாம் எப்போதும் வலிமையாக அன்பாகவே இருப்போம்" என தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த இன்ஸ்டா பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இவருக்கு சக பெண் நடிகர்கள் ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாகவே பெண் நடிகர்கள் மீது உருவக் கேலி செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!