Cinema

“நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்..” : ஒரே டையலாக்கில் புகழ்பெற்ற KGF நடிகர் மரணம் !

கன்னட திரையுலகில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் KGF. யாஷ் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான இப்படம், இந்திய அளவில் பெரிய சாதனை படைத்தது. மேலும் கன்னட சினிமாவில் இது ஒரு புதிய அத்தியாயமாக விளங்கியது.

இதுவரை கண்டிராத கன்னடா திரையுலகம் தனது முதல் அடியை எடுத்து வைத்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் KGF 2. இந்த படமும் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக பெரும் சாதனையை படைத்தது. இதன் மூலம் இந்திய அளவில் யாஷ் பிரபலமானார்.

இந்த படத்தின் முதல் பாகத்தில் கிருஷ்ணா ஜி ராவ் என்ற முதியவர் ஒருவர் கண் பார்வை தெரியாமல் நடித்திருந்தார். அதே போல் இரண்டாம் பாகத்தில் அந்த முதியவர் " உங்களுக்கு ஒரு யோசனை சொல்லுறேன்.. நீங்க மட்டும் அவன் குறுக்க போய்டாதீங்க சார்.." என்று டயலாக் பேசுவார். இந்த டயலாக் தமிழில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

KGF படத்தை தொடர்ந்து, தெலுங்கில் கிருஷ்ணா குமார் இயக்கிய 'நானோ நாராயணப்பா' என்ற நகைச்சுவைத் திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக மாறியுள்ளார். இப்படத்தில் கிருஷ்ணா ஜி ராவ், நாராயணப்பாவாக ஸ்டைலிஷான தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கே.ஜி.எப்., புகழ்பெற்ற முதியவர் கிருஷ்ணா ஜி ராவ் (70), சமீபத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் இதற்காக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு இவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாவும், இதனால் இவர் ஐசியூ பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகம், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால் கன்னட திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது. திரைப்படங்களில் இதுவரை முக்கிய கதாபாத்திரங்களில் சுமார் 40-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திரையரங்கில் மீண்டும் வெளியாகிறது தெலுங்கு 'அசுரன்': ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் -என்ன விசேஷம் தெரியுமா?