Cinema
மஞ்சுவாரியர் பாட்டு TO சமுத்திரக்கனி Photos வரை.. தொடர்ந்து வெளியாகும் 'துணிவு' பட Update: ரசிகர்கள் குஷி
துணிவு படத்தில் மஞ்சுவாரியர் பாடல் படியுள்ளதாக அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் சில தோல்வியை தழுவினாலும், வசூல் ரீதியாக பெரிய அளவில் ரசிகர்களால் தூக்கி விடும். இதனாலே இவர் இன்றும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்டாராக இருக்கிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டது. மேலும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல கேளிக்கையான விஷயத்தை செய்து வந்தனர். இருப்பினும் இந்த படத்தில் அப்டேட்-ஐ படக்குழுவினர் ரகசியமாகவே வைத்திருந்தனர். எனினும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
முன்னதாக எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, வலிமை என இரு படங்கள் வெளியான நிலையில், தற்போது இவர்களது கூட்டணி மூன்றாம் முறையாக இணைத்துள்ளது. அதன்படி தற்போது எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் தான் 'துணிவு'.
இந்த படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன், ஆமிர், மமதி சாரி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் பண்டிகையை ஒட்டி விஜய் - அஜித் படம் நேருக்கு நேர் மோதும் என்று திரைவட்டாரங்கள் தெரிவித்தது. அந்த வகையில் தற்போது விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் போட்டிபோடும் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. மேலும் டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் முதல் பாடலான அனிருத் பாடியுள்ள 'சில்லா சில்லா' என்ற பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அண்மையில் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல ஆல்பம் பாடகரான காக்கா கதை வைசாக் இணையவுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இப்படி இருக்கையில் நேற்று நடிகை மஞ்சு வாரியர் துணிவு படத்தில் பாடல் ஒன்றை படியுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் நடிகரை சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் துணிவு படத்தில் படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் "துணிவு……. பரபரப்பாக…." என்று குறிப்பிட்டு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக அஜித் படத்தின் அப்டேட்கள் வெளியாகுமா என்று ரசிகர்கள் ஏங்கி தவித்திருந்த நிலையில், துணிவு படத்தின் பல அப்டேட்கள் தொடர்ந்து வெளியாவது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!