Cinema
"நீங்கள் யார்?" - பாலிவுட் நடிகரை அதிர வைத்த நபர்.. அலட்டாமல் பொறுமையாக பதிலளித்த ரன்வீர் | Video
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் ரன்வீர் சிங். 2010-ல் வெளியான 'பேண்ட் சர்மா பாராத்' என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு, முதல் படமே பெரிய அளவில் ஹிட் கொடுத்து ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். அதன்பின் 2013-ம் ஆண்டு ரன்வீர் சிங், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான ராம்லீலா படத்தின் மூலம் இவரும் தீபிகாவும் காதலிக்க தொடங்கினர்.
அதன்பிறகு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், ரன்வீரும், தீபிகாவும் - பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தனர். இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு இருவரும் சேர்ந்து '83' என்ற படத்தை தயாரித்தனர்.
இவர்களது முதல் தயாரிப்பு படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால், அதன்பிறகு இவர்கள் படம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அண்மையில் ரன்வீர் சிங், நிர்வாணமாக எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவரே சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார். இந்த சர்ச்சை உலகளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் ரன்வீர் சிங் அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற ஃபார்முலா 1 கார்பந்தய நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். அங்கே நிகழ்ச்சியை காண நேரில் வந்தவர்களை முன்னாள் ஃபார்முலா ஒன் ரேஸரான மார்ட்டின் ப்ரண்டில் பேட்டியெடுத்துள்ளார். அப்போது சாதாரண உடை, கண்ணாடி தொப்பி உள்ளிட்டவற்றை அணிந்து சென்றிருந்த ரன்வீரிடம் "நீங்கள் யார்? உங்களை அறிமுகம் செய்துகொள்ளுங்கள்" என இவர் கேட்டுள்ளார்.
அதற்கு எந்த வித அலட்டலும் இல்லாமல், தன்னடக்கமாக "நான் ஒரு பாலிவுட் நடிகர், இந்தியாவில் உள்ள மும்பையைச் சேர்ந்தவன். நான் ஒரு எண்டர்டெயினர்" என்று கனிவுடன் பதில் கூறியிருக்கிறார். மைதானத்தில் இவரளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பாலிவுட் நடிகர் தன்னடக்கத்துடன் நடந்துகொள்வது என்பது வியக்கத்தக்கதாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!