Cinema
திடீரென படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த 'ஓ பேபி' பட நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?
படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக செளர்யா மயங்கி விழுந்ததால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பிரபல தெலுங்கு நடிகராக இருப்பவர் நடிகர் நாக செளர்யா. இவர் தெலுங்கில் 2011-ல் வெளியான 'Cricket Girls And Beer' படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழில் சாய் பல்லவி நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான 'தியா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மேலும் சமந்தா நடிப்பில் வெளியான 'ஓ பேபி' திரைப்படத்தில் 'விக்ரம்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது 3 தெலுங்கு படங்களில் நடித்து வரும் இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில் இவர் தனது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க ஜிம்முக்கு செல்கிறார். இதனால் நீர்ச்சத்து மிக்க உணவுகளை தவிர்த்து அங்கே பின்பற்றக்கூடிய டயட்டையும் பின்பற்றுகிறார். இப்படி இருக்க, கடந்த 2 நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது திடீரென இவர் மயக்கம்போட்டு விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு நீர் இழப்பு காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் சரியாகி விடுவார் என்றும் கூறினர். இதையடுத்து படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இது திரைவட்டாரத்தில் பெரும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இவருக்கும் அனுஷா ஷெட்டி என்ற இளம்பெண்ணுக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!