Cinema
குடும்பத்துடன் புத்த மதத்தை தழுவிய பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா.. - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
பிரபல வில்லன் நடிகர் சாய் தீனா தனது குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறியுள்ளது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர் சாய் தீனா. மெயின் வில்லனாக இவர் நடிகராக இல்லாமல் இருந்தாலும், வில்லனுக்கு வலது கை என்கிற முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருப்பார். கடந்த 2004-ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான 'விருமாண்டி' திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் தீனா.
அப்போது இவர் முக்கிய ரோலில் நடித்து மற்ற இயக்குநர்கள் கவனத்தையும் ஈர்த்தார். அதன் பின்னும் இவருக்கு நெகட்டிவ் ரோலே கிடைத்துள்ளது. தமிழில் எந்திரன், மாநகரம், தெறி, மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர் என பல முன்னணி படங்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார்.
திரை நடிப்பில் வில்லனாக அறியப்படும் இவர், தனது நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோ என்று ரசிகர்கள் பலராலும் பாராட்டுக்களை பெற்று வருகிறார். இவரது பேச்சுக்கே தனி ரசிகர்கள் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின்போது கூட நடிகர் தீனா தன்னால் முடிந்த அளவு பொதுமக்களுக்கு உதவிகளை செய்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது தீனா தான் இந்து மதத்திலிருந்து புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இவர் மட்டுமில்லாமல், இவரது மனைவி மற்றும் 3 குழந்தைகளும் சேர்ந்து பிக்கு மௌரியா முன்னிலையில் 22 உறுதி மொழிகள் ஏற்று புத்த மதத்திற்கு மாறியுள்ளார். இவர்களுடன் புத்த துறவி ஒருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
அவர் திடீரென்று புத்த மதத்திற்கு மாறியது தொடர்பாக ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்விகளை எழுப்பி வருகிறது. இதற்கான விளக்கத்தை அவர் விரைவில் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !