Cinema
”ரசிகர்கள் எனக்கு சாமி மாதிரி.. அவங்க முன்னாடி அதை செய்யமாட்டேன்” -அமிதாப் விளக்கத்தால் அதிர்ந்த பாலிவுட்
தனது ரசிகர்களை சந்திக்கும்போது ஏன் தனது காலணிகளை கழட்டி வைத்து விட்டு நடிகர் அமிதாப் பச்சான் சந்திக்கிறார் என்ற கேள்விக்கு அவரே தற்போது அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக திகழ்பவர் அமிதாப் பச்சான். தற்போது இவருக்கு 80 வயதாகும் நிலையிலும் இன்னமும் திரை உலகில் மின்னும் நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். 190-க்கும் மேற்பட்ட இந்தி மொழி படங்களில் நடித்துள்ள இவருக்கு அன்று முதல் இன்று வரையிலும் ரசிகர் கூட்டம் பெருகி கொண்டே வருகிறது.
தற்போது சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். தள்ளாடும் வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், பாலிவுட் திரை நட்சத்திரங்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.
இந்த நிலையில் இவர் மும்பை நகரில் 'ஜால்சா' என்ற வீடு ஒன்று கட்டியுள்ளார். அந்த வீட்டில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனது ரசிகர்களை சந்தித்தும் வருகிறார். ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அவர், தனது ரசிகர்களை சந்திக்காமல் இருந்துள்ளார். இருப்பினும் தற்போது மீண்டும் தொற்று நோய் குறைவாக காணப்பட்டு வழக்கம்போல் இருப்பதால் தனது ரசிகர்களை கண்டு வருகிறார்.
அப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது ரசிகர்களை சந்தித்த அமிதாப், அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். அதோடு அவர்களோடு பேசவும் செய்தார். முன்னதாக அவர் ரசிகர்களை சந்திக்கும் முன்பு தனது காலணிகளை கழட்டி வைத்துவிட்டு பிறகு சென்று சந்தித்து பேசியுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அமிதாப்பிடம் காலணிகளை கழட்டி விட்டு ரசிகர்களையே சந்திப்பது ஏன் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. எனவே தான் காலணிகளை கழட்டி வைத்து, ரசிகர்களை சந்தித்து வருவதற்கு இது தான் காரணம் என காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது "நான் எப்போதும் ஜல்சா வீட்டில் எனது ரசிகர்களை சந்திக்கும்போது செருப்பை கழட்டி விடுவேன். ஏனென்றால் எனக்கு ரசிகர்கள் என்றால் மிகவும் பக்திமையமான ஒன்று. அவர்களை சந்திப்பதை ஒரு ஆன்மீக நிகழ்ச்சிபோல் நான் நினைக்கிறேன். என்னை வாழவைக்கும் தெய்வங்களாகவே அவர்களை பாவிக்கிறேன். அவர்கள் இல்லாவிட்டால் நான் இல்லை. 80 வயதிலும் கூட என்னை ரசிக்கும் ரசிகர்களுக்கு நான் செய்யும் சிறிய மரியாதை இது" என்றார்.
அமிதாப்பின் இந்த விளக்கத்தை கேட்டு ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். ஒரு மிகப்பெரிய திரை நட்சத்திரம் தனது ரசிகர்களுக்காக இவ்வாறு செய்வது மரியாதை மற்றும் பாராட்டுக்குரியது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!