Cinema
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்' - துபாயில் மாநாட்டில் வெளியீடு !
கவிஞர் வைரமுத்துவின் சாகித்ய அகாடமி விருது பெற்ற 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நூல் ஆங்கில மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு் துபாய் சர்வதேச மாநாட்டில் வெளியிடப்படுகிறது.
தமிழ் கவிஞர்களில் நீங்க முடியாத இடத்தை பிடித்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் கவிதை, நாவல் என மொத்தம் 37 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது கைவண்ணத்தில் வெளியான 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' நாவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இவர் எழுதிய புத்தங்கங்களில் சில தெலுங்கு, மலையாளம், கன்னட, இந்தி, ஆங்கிலம், ரஷ்ய ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதிக்கொடுத்துள்ளார். இவரது படைப்புகளுக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளது.
இவரை போற்றும் விதமாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 'கவிப்பேரரசு' என்றும் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 'கவி சாம்ராட்' என்றும், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் காலம் 'காப்பிய கவிஞர்' என்றும் பட்டங்களை வழங்கியுள்ளனர். தற்போது இவர் கவிப்பேரரசு என்றே அறியப்படுகிறார்.
இந்த நிலையில் இவரது கைவண்ணத்தில் உருவான 'கள்ளிக்காட்டு இதிகாசம்' தற்போது ஆங்கிலத்தில் வெளியாகவுள்ளது. தற்போது வரை 22 மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்த புத்தகம் 2003-ம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருதை பெற்றது.
வரும் நவம்பர் 9-ம் தேதி துபையில் அட்லாண்டிஸ் ஹோட்டலில் நடைபெறவிருக்கும் 'ரைஸ்' மாநாட்டில் கள்ளிக்காட்டு இதிகாசம் (The Saga of the Drylands) கீதா சுப்ரமணியம் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகவுள்ளது. உலகத் தொழில் முனைவோர் பங்குபெறும் இந்த மாநாட்டில், கவிஞர் வைரமுத்து நூலை வெளியிட 32 நாடுகளின் பிரதிநிதிகள் அதனை பெற்றுக்கொள்கிறார்கள்.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் இங்கிலாந்து நாட்டு அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்டீபன் டிம்ஸ் மற்றும் லண்டன் மாநகர அந்நாள் மேயர் ராபின் வேல்ஸ் இருவரும் கலந்துகொண்டு கள்ளிக்காட்டு இதிகாசம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
எனவே அப்போதே இந்த நூலை ஆங்கிலம் உட்பட 23 மொழிகளில் மொழிபெயர்க்க சாகித்ய அகாடமி முயற்சி மேற்கொண்டது. ஆனால் 22 மொழிகளில் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து நூல் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சமூகநீதித் தேரைப் பின்னுக்குத் தள்ளுவதா? : விஜய்க்கு தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி!
-
“தமிழோடு விளையாடியவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை” : தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை - திமுக கண்டனம்
-
ராமநாதபுரத்தில் பரபரப்பு : ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்ட சார்பதிவாளர் கையும் களவுமாகக் கைது!
-
”CSK நிர்வாகத்திற்கும் தோனிக்கும் பிரச்சனையா.. அஸ்வின் கிளப்பிய புதிய புயல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!”
-
ஓடி ஒளியாதீர்கள் CM Sir : மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு - கனிமொழி என்.வி.என்.சோமு கண்டனம்!