Cinema
"இதுவும் அவளை மறக்கத்தான்.." - KGF-ல் களமிறங்கும் சியான் விக்ரம்.. வெளியானது புது Update !
தமிழில் முன்னணி நடிகராக விளங்கும் விக்ரம் நடிப்பில் சமீப காலமாக வெளியான அனைத்து திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை. குறிப்பாக சாமி 2, கடாரம் கொண்டான் படங்கள் தோல்வியை தழுவின; அதோடு மகான், கோப்ரா படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, பிரகாஷ்ராஜ், சரத்குமார் என திரைப்படலாமே நடித்து அண்மையில் வெளியான படம் தான் 'பொன்னியின் செல்வன்'. இதில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்த விக்ரமின் நடிப்பு அனைவர் மத்தியிலும் வெகுவாக பாராட்டை பெற்று வருகிறது.
இந்த நிலையில் விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்டியோ கீரின் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் கூறுகையி, "19-ம் நூற்றாண்டில் கே.ஜி.எஃப் -ல் நடந்த ஒரு சம்பவத்தை மையமாக வைத்தே இந்தப்படம் எடுக்கப்பட இருக்கிறது. நிச்சயம் இது ஒரு சவாலான படமாக இருக்கும்" என்றார்.
இந்த நிலையில் இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பான் படமாக உருவாக இருக்கும் இந்தப்படம் 3-டியில் உருவாகவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!