Cinema
பிரபல இசையமைப்பாளரும், அனிருத்தின் தாத்தாவுமான எஸ்.வி.ரமணன் காலமானார் ! - யார் இந்த SV ரமணன் ?
தமிழில் பிரபல பழபெரும் தயாரிப்பாளரும், இயக்குநருமாக வலம் வந்தவர் தான் கே சுப்பிரமணியம். இவரரது மகன்களில் ஒருவர் தான் எஸ்.வி.ரமணன். இவர் சுதந்திரத்திற்கு முன்பு வெளியான சில தமிழ் படங்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகியிருந்த இவர், அவ்வப்போது பின்னணி குரல் கொடுத்தும் வந்துள்ளார். தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் ரவிச்சந்தர் இவரது பேரன் ஆவார்.
மேலும் இவரது மற்றொரு பேரன் ஹ்ரிஷிகேஷ் தனுஷ் நடிப்பில் வெளியான 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் தனுஷுக்கு தம்பியாக கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதோடு இவர் 'அண்ணாத்த' படத்தில் மாப்பிள்ளையாகவும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் எஸ்.வி.ரமணன் வயது மூப்பின் காரணாமாக இன்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி திரையுலகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு நடக்கவிருக்கும் இவரது இறுதிசடங்கில் பல்வேறு திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவிக்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்.வி. ரமணின் மறைவுக்கு திரை பிரபலங்களும் கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் தூர்தர்ஷனுக்காக தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். அகில இந்திய வானொலியில் பல விளம்பரங்கள் இவர் குரலில் வெளியாகி உள்ளன. இப்பொழுதும் பிரபலமான ரத்னா ஃபேன் ஹவுஸ் விளம்பரத்தில் ஒளிபரப்பாகவும் குரல் இவருடையது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
கொளத்தூரில் முதலமைச்சர் சிறுவிளையாட்டரங்கம் : 2 இறகுப்பந்து ஆடுகளங்கள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் என்ன?
-
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு 3% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?
-
2,429 பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நாளை விரிவாக்கம் : 3.6 லட்சம் மாணவர்கள் பயன்!
-
முதலமைச்சரின் உதவி மையம் : திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
TNPSC Group 1 : 89 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!